Advertisment

சொந்த பிசினஸ்… நீங்களே ஆதார் கார்டு மையம் அமைக்கலாம்; முழு விவரம் இங்கே!

ஆதார் கார்ட் மையத்தை இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது

author-image
WebDesk
New Update
சொந்த பிசினஸ்… நீங்களே ஆதார் கார்டு மையம் அமைக்கலாம்; முழு விவரம் இங்கே!

சொந்தமாக பிசினஸ் தொடங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது. ஆனால், அதற்கு பெரிய அளவில் மூதலீடு செய்ய வேண்டும் என்பதால், பலரால் செய்துகாட்டிட முடியவில்லை.

Advertisment

ஆனால், தற்போது அரசே சொந்த தொழில் தொடங்குவதற்கான உதவியைச் செய்யும் பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆதார் மையம் திறந்திட, ஆர்வமுள்ள நபர்களை விண்ணப்பிக்ககோரி அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு கார்னரிலும் ஆதார் கார்ட் மையம் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அரசாங்கம் இத்தகைய உதவிகளை செய்கிறது.

இந்தியக் குடிமக்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அடையாள அட்டையாக ஆதார் கார்ட் உள்ளது. தற்போது, ஆதார் கார்ட் மையத்தை இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது பலரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதார் கார்ட் மையத்தை எப்படி ஆரம்பிக்கலாம் என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

ஆதார் கார்ட் மையம் ஆரம்பிக்க லைசன்ஸ் தேவை

ஆதார் கார்ட் மையத்தைத் திறக்க விரும்புவோர் முதலில் அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கான லைசன்ஸ் பெற்றவுடன், நீங்கள் இந்த மையத்தை தொடங்கலாம். UIDAI தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த லைசன்ஸ் வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வு ஆதார் ஆபரேட்டர் / சூப்பர்வைசர் / சிஇஎல்சி ஆபரேட்டருக்கு நடத்தப்படுவது ஆகும்.

ஆதார் மையத்தை திறப்பது எப்படி?

ஆதார் கார்ட் மையத்தைத் திறக்க, நீங்கள் முதலில் யுஐடிஏஐ நடத்தும் ஆன்லைன் தேர்வில் பங்கேற்க வேண்டும். தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே, உங்களுக்கு லைசன்ஸ் வழங்கப்படுகிறது. இப்போது நீங்கள் ஆன்லைன் தேர்வுக்கு, எவ்வாறு விண்ணப்பிக்கலாம் அல்லது ஒரு மையத்தை எவ்வாறு தேர்வு செய்வது என்பதுதான் கேள்வி. அதை விரிவாக பார்க்கலாம்

ஆதார் அட்டை மையத்திற்கு விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் தேர்வுக்கு, விண்ணப்பதாரர்களே நேரத்தையும் மையத்தையும் தேர்வு செய்யலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்

step 1 : முதலில் NSEIT வெப்சைட்க்கு செல்ல வேண்டும்

step 2: ஐடி உருவாக்க வேண்டும். (ஏற்கனவே ஐடி இருந்தால் அதன் மூலம் login செய்துகொள்ளலாம்

step 3: ஐடியை உருவாக்க, ஆதார் கார்டை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு, ஆதார் கார்ட் சிஸ்டமில் முன்கூட்டியே செவ் செய்துகொள்வது நல்லது.

step 4: உங்களுக்கு வந்த குறியீட்டு எண்ணை பதிவிட வேண்டும். இந்த எண், UIDAI இன் அதிகாரப்பூர்வ தளத்தில் நீங்கள் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்யும் போது, கிடைத்திடும்.

step 5: ரெஜிஸ்ட்ரேஷன் செய்முறை முடிந்ததும், உங்களுக்கான படிவம் திறந்திடும்.

step 6: அதில், மெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். உங்களின் செல்போன் மற்றும் மெயிலுக்கு ஐடி மற்றும் பாஸ்வேர்ட் வந்துவிடும்.

step 7: பின்னர் உங்களுக்கு வந்த ஐடி, பாஸ்வேர்ட் மூலம், Aadhaar Testing & Certification சைட்டில் லாகின் செய்யலாம்.

step 8: உடனடியாக, நீங்கள் விவரங்கள் நிரப்ப வேண்டிய படிவம் திரையில் தோன்றும். அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

step 9: பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

step 10: அங்கிருக்கு preview ஆப்ஷனை கிளிக் செய்தால், நீங்கள் இதுவரை பதிவிட்ட அனைத்து தகவல்களும் திரையில் தோன்றும். அவை சரிதானா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில், அப்போது எடிட் செய்துகொள்ளலாம்.

step 10: இறுதியாக declaration box இல் டிக் செய்துவிட்டு, submit பட்டன் கிளிக் செய்ய வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பித்த பிறகு, தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆதார் மையம் திறப்பதற்கான தேர்விற்குக் கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை

நீங்கள் படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று MENU ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

இங்கே, நீங்கள் கட்டணம் செலுத்துவதற்கான ஆப்ஷனை காண முடியும்.

அதை கிளிக் செய்தவுடன், எந்த வங்கி மூலமாக பணம் செலுத்தப் போகிறீர்கள் என்பதை தேர்வு செய்யலாம்

பின்னர், நீங்கள் அதிகாரப்பூர்வ வங்கியின் தளத்திற்குக் கட்டணம் செலுத்த மாற்றப்படுவீர்கள்.

Tamil Nadu Jobs Aadhar Update Aadhar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment