Advertisment

பெண் என்றால் 60 பவுன் ; ஆண் என்றால் 10 பவுன் - இதுதான் அளவு : இதுக்கு மேல போனா, அவ்வளவுதான்...

Gold ornaments : பெண்கள் என்றால் 500 கிராம், அதேநேரத்தில் ஆண்கள் என்றால் 100 கிராம் வரை தங்கத்தை வீட்டில் தாராளமாக வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold selling

பெண்கள் என்றால் 500 கிராம், அதேநேரத்தில் ஆண்கள் என்றால் 100 கிராம் வரை தங்கத்தை வீட்டில் தாராளமாக வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தங்கம் என்பது ஆபரணம் மட்டுமல்லாது, இந்தியர்களிடையே, அது ஒரு முதலீ்ட்டு பொருளாகவும் விளங்கிவருகிறது. திருமணம், பண்டிகை, விசேஷங்களில், நமது தராதரத்தை காட்ட பயன்பட்டு வந்த தங்க நகைகள், தற்போது பணம், டாலர் போன்ற முதலீட்டு பொருளாக மாறியுள்ளது.

இதனிடையே, வீட்டில் உள்ள மற்றும் அடகுவைக்கப்பட்ட தங்க நகைகளுக்கு ரசீது வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் அபராதம் கட்ட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவல் சமூகவலைதளங்களில் சிலநாட்களாக வேகமாக பரவி வருகிறது. இந்த தகவல், அனைத்து தரப்பினரையும் பெரும்அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

மத்திய அரசின் வருமான வரித்துறை மற்றும் நேரடி வரி விதிப்பு ஆணையம் தங்க நகைகள் கட்டுப்பாட்டு சட்டம் 1968ன் படி வரையறுக்கப்பட்ட விதிகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பெண்கள் 250 கிராம் தங்கம், திருமணமான பெண்கள் என்றால் 500 கிராம் தங்கம் மற்றும் ஆண்கள் என்றால் 100 கிராம் அளவிற்கு தங்கத்தை வீட்டில் தாராளமாக வைத்து இருக்கலாம். அதற்கு மேல் தங்கத்தை வைத்திருக்கும் பட்சத்தில், அதன் மூலத்தை தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Income Tax
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment