Advertisment

ஈஎம்ஐ அவகாச மோசடி: உங்களை ஆபத்துக்குள்ளாக்காமல் இந்த வசதியை எவ்வாறு பெறுவது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஈஎம்ஐ அவகாச மோசடி: உங்களை ஆபத்துக்குள்ளாக்காமல் இந்த வசதியை எவ்வாறு பெறுவது?

மிகவும் வேகமாக பரவிவரும் நோவல் கொரோனா வைரஸ் கோவிட்-19னின் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் கிட்டத்தட்ட இயங்கமுடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமக வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடன் வாங்கியவர்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

Advertisment

இவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக பாரத ரிசர்வ் வங்கி ஈஎம்ஐ கட்டுவதற்கான அவகாசத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் கடன் வாங்கியவர்கள் கடன் தவனை தொகையை திருப்பி செலுத்துவதை மூன்று மாதங்கள் ஒத்தி வைக்க அனுமதிக்கிறது.

SBI Savings Account: அடிமடியில் கைவத்த எஸ்.பி.ஐ., வட்டி இவ்வளவுதானா?

எனினும் சைபர் மோசடி பேர்வழிகள் இந்த சநதர்ப்பத்தை பயன்படுத்தி இந்த மூன்று மாத அவகாசத்தை பயன்படுத்த நினைக்கும் கடன் வாங்கியவர்களை ஏமாற்ற முயல்கின்றனர். இது குறித்து பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஈஎம்ஐ அவகாச மோசடிகளுக்கு எதிராக தங்கள் வங்கி தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ள எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

இணைப்புகளை சொடுக்க (click links) அல்லது இணைப்புகளை திறக்க (open attachments) சொல்லும் மின்னஞ்சல்களை எச்சரிக்கையாக கையாள வேண்டும். Anti-malware மற்றும் anti-phishing solutions கள் குறிப்பாக தீங்கிழைக்கும் மின்னஞ்சல்களை தடுக்க உதவிகரமாக இருக்கும்.

வழக்கமாக உங்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பாத புதிய ஆதாரங்களிலிருந்து மின்னஞ்சல் வந்தால் அதில் கவனமாக இருங்கள்.

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நன்கொடைகள் கேட்பது மோசடிகளில் மிக பொதுவான தந்திரம். இதிலிருந்து தப்பிக்க இது தொடர்பாக வரும் மின்னஞ்சல்களை தவர்த்து விட்டு, நம்பகமான தொண்டு நிறுவனங்களை கண்டறிந்து நேரடியாக நன்கொடைகளை கொடுக்கவும்.

வங்கிகளின் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் அதிரடி குறைப்பு - ரிசர்வ் வங்கி நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்தி சைபர் மோசடிகார்கள் phishing ஐ பயன்படுத்தி உங்களது தகவல்கள் மற்றும் login credentials ஐ சுரண்ட வாய்ப்புள்ளது.

எனவே நம்பகமில்லாத ஆதாரங்களில் இருந்து வரும் Phishing மின்னஞ்சல்கள் குறுஞ்செய்திகள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். காண்பது எல்லாவற்றையும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது சொடுக்கவோ செய்யாதீர்கள். பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஏற்கனவே சேமித்து வைத்துள்ள அல்லது பயன்படுத்திய URLs களை பயன்படுத்துங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment