Advertisment

அளவுக்கதிகமான நாணயங்களை அச்சடித்து சிக்கலை சந்திக்கும் ஆர்.பி.ஐ

நாணயங்களை ப்ரேசில், இலங்கை, மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் இறங்கி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
End the gult of coins

End the gult of coins

Ritu Sarin

Advertisment

End the gult of coins :  ஒரு நாளைக்கு அளவுக்கதிகமான நாணயங்கள் நம்முடைய வாலட்டில் தங்குவதை நாம் விரும்புவதில்லை. ஏன் என்றால் அதனை வைத்து சமாளித்து செலவு செய்வது என்பது மிகவும் கடினம். பணமதிப்பிழக்க நடவடிக்கைகளுக்குப் பின்னர்,

நாட்டில் நாணயங்களின் புழக்கத்தை அதிகரிக்க அதிகளவும் நாணயங்கள் அச்சிடப்பட்டன. ஆனால் அதே சமயத்தில் நம்மில் பலர் நேரடியாகவோ மறைமுகமாகவோ நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் என பணத்தின் செயல்பாட்டினை குறைத்துக் கொண்டோம். நாணயங்களுக்கு பல நாட்களில் வேலையே இல்லாமல் போய்விடுகிறது.

நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கரன்சி மற்றும் காய்ன் பிரிவு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், செண்ட்ரல் பேங்க் இந்த நாணயங்களால் பெரிய அளவிற்கு சிக்கலை சந்தித்துள்ளன என்று கூறியுள்ளது. அவர்கள் சந்திக்கும் பிரச்சனையை ரிவர்ஸ் ஃப்ளோ என்று அளைக்கிறது.

இதனால் தற்போது அரசு, இந்த நாணயங்களை பரிவர்த்தனை செய்வதற்கும், மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும் தனியார் நிறுவனங்களின் உதவியை நாட உள்ளது. மேலும் நம்முடைய நாணயங்களை ப்ரேசில், இலங்கை, மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் இறங்கி உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மூன்றில் ஒரு பங்கு நாணயங்களை மட்டும் அச்சிடக் கூறிய ஆர்.பி.ஐ

அளவுக்கதிகமான நாணயப் புழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி ஆர்.பி.ஐ முன்னதாகவே எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.   ஆர்.பி.ஐ தற்போது மட்டும் 9 பில்லியன் நாணயங்களை சேமித்து வைத்துள்ளது. செக்கியூரிட்டி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியாவிற்கு 2019-20ம் ஆண்டிற்கான நாணயங்களை அச்சடிக்க ஆணையிட்டுள்ளது ஆர்.பி.ஐ. ஆனால் 9 பில்லியன் நாணயங்கள் இல்லை. மாறாக, அதன் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே (சுமார் 3,400 மில்லியன் நாணயங்கள்) அச்சிட கூறியுள்ளது.

மேலும் படிக்க : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் எஸ்.பி.ஐ வழங்கும் வீட்டு லோன்கள் ஒரு பார்வை

சந்திக்கும் பிரச்சனைகள் என்ன ?

ஆர்.பி.ஐ அமைப்பால் 9 பில்லியன் நாணயங்களை சேமிக்க இயலும். ஆனால் அதற்கு மேல் செல்லும் போது, அதனை சேமித்து வைப்பதற்கான பில்டிங், அதன் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி ஆகியவை பிரச்சனையாக உள்ளது.

நாணயனங்களின் எடை காரணமாக அவற்றை டிஸ்ட்ரிப்யூட் செய்வது மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பவதும் கூட பிரச்சனையாக உள்ளது.

இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு நாணயனங்களின் அச்சிடப்படும் அளவை கணிசமாக குறைக்க வேண்டும். அக்டோபர் மாதம் 3ம் தேதி 2018ம் வருடம் நடைபெற்ற ப்ரொடெக்சன் ப்ளானிங் மீட்டிங்கிலும் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.

அச்சிடப்படும் நாணயங்களுக்கு நிகரான நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் என்று கூறப்பட்டாலும், பற்றாக்குறையை கணக்கில் கொண்டு அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment