Advertisment

EPF vs PPF vs VPF : சிறந்த ஓய்வூதிய திட்டம் எது தெரியுமா? குழப்பங்களை நிவர்த்தி செய்யும் ஒப்பீடு

கஷ்டமே இல்லாமல் 60 வயதிற்கு மேல் வாழ வேண்டும் என்பது அனைவரின் கனவும் எதிர்பார்ப்புமாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
pension plan

EPF vs PPF vs VPF best pension plan schemes : கஷ்டமே இல்லாமல் 60 வயதிற்கு மேல் வாழ வேண்டும் என்பது அனைவரின் கனவும் எதிர்பார்ப்புமாக இருக்கும். இளம் பிராயத்தில் செய்ய முடியாத பல விசயங்களையும் இந்த காலங்களில் செய்ய போதுமான பணம் இருப்பதை அனைவரும் விரும்புகின்றனர். இது ஒரு வகையில் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான திட்டத்தை தேர்வு செய்வதற்கு வழி வகை செய்கிறது.

Advertisment

மியூச்சுவல் ஃபண்டுகள், இக்விட்டி, தேசிய ஓய்வூதிய திட்டம், தபால் சேவைகள், எல்.ஐ.சி. திட்டங்கள், யூ.எல்.ஐ.பி.எஸ், பி.பி.எஃப். இ.பி.எஃப்., வாலண்ட்டரி ப்ரோவிடண்ட் ஃபண்டுகள் போன்ற பல தேர்வுகள் நம் முன்னே இருக்கின்றன. ஆனால் அவற்றில் எதை தேர்வு செய்வது என்பது குழப்பத்தை உருவாக்கும் ஒன்றாகும். இங்கே இ.பி.எஃப்., பி.பி.எஃப். மற்றும் வி.பி.எஃப். ஆகியவற்றிற்கு ஒப்பீட்டை நாங்கள் வழங்குகிறோம். உங்களுக்கு விருப்பமான ஒன்றை இதன் மூலம் நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.

பி.பி.எஃப். திட்டம்

இது மத்திய அரசால் வழங்கப்படும் திட்டமாகும். சுயதொழில் செய்யும் தனிநபர்கள் மற்றும் அமைப்பு சாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு முதியோர் வருமானப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. முறைசாரா துறை அல்லது அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள், வேலையில்லாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள், பிபிஎஃப்-இல் முதலீடு செய்யலாம். இதேபோல், வரி செலுத்துவோர் PPF இல் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ .1,50,000 வரை வரிச்சலுகைகளை கோரலாம். ஒரு வருடத்தில் குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாய் செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்திற்கு 1,50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய முடியாது. PPF கணக்குகளால் வழங்கப்படும் வருமானம் நிலையானது. இதற்கு வழங்கப்படும் வட்டியானது 7.1% ஆக உள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி

இதுவும் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டமாகும். சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு கட்டாயமான சேமிப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர் மற்றும் முதலாளி இருவரும் ஒவ்வொரு மாதமும் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவிகிதம் பங்களிப்பு செய்யும் நிதியாகும். முன்னதாக இந்த சதவீதம் தனியார் நிறுவனங்களுக்கு 12 சதவீதமாக இருந்தது. முதலாளி மற்றும் பணியாளர் ஒவ்வொரு மாதமும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) தங்கள் பங்களிப்பை டெபாசிட் செய்கின்றனர். இந்த ஃபண்டில் இருக்கும் திரட்டப்பட்ட மொத்த தொகை அல்லது தொகையின் ஒரு பகுதியை அவசர தேவைக்காக எடுக்கலாம். ழியர் தனது வேலையை மாற்றினால் இந்த தொகையை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற முடியும். இபிஎஃப் கணக்கு ஆண்டுக்கு 8.5% வட்டியை வழங்குகிறது.

வி.பி.எஃப். (Voluntary Provident Fund)

ஊழியர் பொது வைப்பு நிதியின் (Employees' Provident Fund) நீட்டிக்கப்பட்ட வடிவமாகும். குறைந்தபட்ச தேவைக்கு மேலே ஒருவர் முதலீடு செய்ய விரும்பினால் அது வி.பி.எஃப். மூலமாக மேற்கொள்ளலாம். ஆனாலும், முதலாளியின் பங்கீடு ஒரே மாதிரியாக இருக்கும். இந்த வி.பி.எஃப். பங்கானது, இ.பி.எஃப். கணக்கில் வரவு வைக்கப்பட்டு அதற்கான வட்டி விகிதங்கள் சேர்க்கப்படும். இதற்கு உச்ச வரம்பு ஏதும் இல்லை. இந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bank News Pension Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment