பி.எஃப். அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து போன் கால்கள் வருகிறதா? எச்சரிக்கை செய்யும் ஈ.பி.எஃப்.ஒ

Employees Provident Fund (EPF) subscriber tips : போலி கால்களை பொருட்படுத்த வேண்டாம்!

By: November 26, 2019, 2:56:24 PM

EPFO Account Holders Alert :  வங்கி தொடர்பான தகவல்களையும், முக்கிய பாஸ்வேர்ட்களையும் யாரிடமும் பகிரக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்புடன் வாடிக்கையாளர்களை இருக்க சொல்கிறது வங்கி நிறுவனங்கள். பி.எஃப் பணம் தொடர்பான முக்கிய டேட்டாக்களையும் யாரிடம் பகிர வேண்டாம் என ஈ.பி.எஃப்.ஓ ஏற்கனவே அறிவித்திருக்கிறது. மேலும் உங்கள் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்துங்கள் என்று எப்போதும் தங்களுடைய சேவையை பயன்படுத்தும் மக்களுக்கு நாங்கள் அறிவுறுத்தவில்லை என்பதையும் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது ஈ.பி.எஃப்.ஓ அமைப்பு.

ஏற்கன்வே கடந்த மாதம் யாரேனும் உங்களை போனில் தொடர்பு கொண்டு பி.எஃப். அலுவலகத்தில் இருந்து பேசுகின்றோம். உங்களின் ஆதார் அடையாள அட்டை எண்கள், பேங்க் அக்கௌண்ட் நம்பர்கள், பான் கார்ட் நம்பர்களை யாராவது கேட்டால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கி கணக்கு தொடர்பாகவோ, வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யுங்கள் என்றோ உங்களுக்கு யாரேனும் போன் செய்தால் அதனை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம் என்று பி.எஃப்-இன் அதிகாரப்பூர்வ இணையத்திலும் ட்விட்டர் தளத்திலும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்று உங்களுக்கு ஏதேனும் ஃபேக் கால்கள் வரும் பட்சத்தில் நீங்கள் சமூக வலைதளங்களில் இருக்கும் ஈ.பி.எஃப்.ஒ அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் தங்களின் புகார்களை பதிவு செய்யலாம். டோல் ஃப்ரீ எண்ணான 1800118005 – இந்த எண்ணுக்கு நீங்கள் அழைத்து உங்களின் புகார்களை நீங்கள் பதிவு செய்யலாம். இந்த மே மாதத்தில் இருந்து 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையத்தை பயன்பாட்டிற்கு வைத்திருக்கிறது ஈ.பி.எஃப்.ஒ.

மேலும் படிக்க : FASTag Sticker : எந்தெந்த வங்கிகளில் FASTag அட்டையை வாங்கலாம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Epfo account holders alert

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X