Advertisment

வட்டியே இல்லாமல் பர்சனல் லோன்- வீட்டுக் கடன்; சிம்பிள் ஸ்டெப்ஸ்

Banking news in Tamil, EPFO housing loan guidelines in Tamil: நீங்கள் வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்கு கடன் வாங்கலாம். வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துவதற்கான கடனையும் நீங்கள் பெறலாம். மேலும் வீட்டை புதுப்பிக்க அல்லது விரிவாக்கம் செய்யவும் கடனையும் பெறலாம்.

author-image
WebDesk
New Update
வட்டியே இல்லாமல் பர்சனல் லோன்- வீட்டுக் கடன்; சிம்பிள் ஸ்டெப்ஸ்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது மத்திய அரசு அங்கீகரித்த திட்டமாகும். இது ஊதிய வகுப்பினருக்கு ஓய்வுதிய பலன்களை தருகிறது. ஜனவரி 2021ல் 13.36 லட்சம் நிகர சந்தாதாரர்களை புதிதாக சேர்த்துள்ளது. ஈபிஎஃப்ஒ கணக்கு விவரங்களை தெரிந்துக்கொள்ள UMANG App உதவுகிறது. ஈபிஎஃப்ஒ டெபாசிட்களுக்கான வட்டிவிகிதம் 8.5 சதவீதமாக உள்ளது

Advertisment

வரி சேமிப்பு சலுகைகளைத் தவிர, ஒருவர் ஈபிஎஃப் கணக்கிலிருந்து வீட்டுக் கடன் அல்லது பர்சனல் லோனைப் பெறலாம். இதனை ஊதியதாரர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்குகிறது.

எதற்கெல்லாம் கடன் வாங்கலாம்?

நீங்கள் வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்கு கடன் வாங்கலாம். வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துவதற்கான கடனையும் நீங்கள் பெறலாம். மேலும் வீட்டை புதுப்பிக்க அல்லது விரிவாக்கம் செய்யவும் கடனையும் பெறலாம்.

இது தவிர, உங்களது திருமணம் அல்லது உங்கள் மகன் மற்றும் மகளின் திருமணத்திற்காகவும் கடன் பெறலாம். 

மேலும், உங்கள் மகள், மகன், சகோதரர் அல்லது சகோதரியின் கல்விச் செலவிற்காக கடன் பெறலாம்.

மேலும், உங்களுடைய அல்லது உங்கள் மகள், மகன், மனைவி மற்றும் பெற்றோரின் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு கடன் பெறலாம்.

இயற்கை பேரழிவு காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்காக கடன் பெறலாம்.

ஒருவர் தன்னுடைய சம்பளத்தை எடுக்க முடியாத நிலையில் கடன் வாங்கலாம்.

வீட்டுக் கடன் வாங்க தேவையான தகுதிகள்:

வீடு அல்லது வீட்டுமனை வாங்க கடன் பெற விரும்பினால், அது கடன் பெறுபவர் அல்லது அவரது மனைவி பெயரில் இருக்க வேண்டும். அல்லது இருவர் பெயரில் இருக்கலாம்.

மாத சம்பளம் மற்றும் டி.ஏ-வில் 36 மடங்கு வரை வீடு கட்ட கடன் பெறலாம்.   அதேநேரம் வீட்டுமனை வாங்க 24 மடங்கு வரை கடன் பெறலாம். கடன் பெற நீங்கள் அடுத்த 5 ஆண்டுகள் பணியில்  இருக்க வேண்டும்.

வீட்டுக்கடனை திருப்பிச் செலுத்த கடன் பெற விரும்பினால் நீங்கள் மற்றும் உங்கள் நிறுவனம் டெபாசிட் செய்த தொகையில் 90 சதவீதம் வரை கடன் பெறலாம். இந்தக் கடனை பெறுவதற்கு நீங்கள் அடுத்த 10 ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும்.

கடன் பெறும் வழிமுறைகள்

கடனைப் பெற உங்களிடம் UAN  எண் இருக்க வேண்டும். அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், ஆதார் விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், பான்கார்டு  போன்றவை தேவை.

நீங்கள் முதலில் Member e-SEWA தளத்திற்குச் சென்று உங்கள் UAN எண் மற்றும் பாஸ்வேர்டுஐ பதிவிட்டு உள் நுழையவும்.

பின்பு ’மேனேஜ்’ பகுதிக்குச் செல்லவேண்டும். அங்கு உங்களது விவரங்களான ஆதார், வங்கி கணக்கு விவரங்கள், பான்கார்டு எண் ஆகியவற்றை சரிபார்க்கவும்.

அதன்பின் ‘ஆன்லைன் சர்வீசஸ்’ பகுதிக்குச் செல்லவும், அதில் CLAIM (Form-31,19 and C) ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

அப்பொழுது உங்கள் உறுப்பினர் விவரங்களை பார்க்கலாம். பின்னர் உங்கள் வங்கி கணக்கின் கடைசி நான்கு இலக்க எண்ணை உள்ளிடவும். அதைச் செய்தவுடன் ’வெரிஃபை’ என்பதை அழுத்தவும்.

பின்பு ‘Yes’ என்பதை அழுத்தவும்.

இப்பொழுது ‘Proceed for Online claim’ என்பதை அழுத்தவும். பின்பு நீங்கள் ‘ I want to apply for’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.

பின், கடன் பெறுவதற்கான காரணம், கடன் தொகை, உங்கள் முகவரி ஆகியவற்றை நீங்கள் வழங்க வேண்டும்.

உங்கள் நிறுவனத்தின் ஒப்புதலோடு , கடன் கோரிக்கையை சமர்பித்த 15-20 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் கடன் தொகை வரவு வைக்கப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Epfo Housing Loan Guidelines
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment