Advertisment

கோவை – சீரடி ; அப்படி என்னதாங்க முதல் தனியார் ரயிலில் இருக்கு ? சுவாரஸ்யமான தகவல்கள்

கோவையிலிருந்து ஸ்ரீரடிக்கு செல்லும் முதல் தனியார் ரயில் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை விளக்குவதே இத்தொகுப்பு.

author-image
WebDesk
New Update
கோவை – சீரடி ; அப்படி என்னதாங்க முதல் தனியார் ரயிலில் இருக்கு ? சுவாரஸ்யமான தகவல்கள்

கோவையிலிருந்து ஸ்ரீரடிக்கு செல்லும் முதல் தனியார் ரயில் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை விளக்குவதே இத்தொகுப்பு.

Advertisment

ஜூன் 14ம் தேதி மாலை 6 மணிக்கு புறப்பட இந்த  தனியார் ரயில் ஸ்ரீரடிக்கு 16-ம் தேதி காலை 7.20 மணிக்கு வந்தடைகிறது. இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், எலகங்கா, தர்மாவரம், மந்த்ராலயம் சாலை, வாடி ஆகிய இடங்களில் நின்று செல்கிறது.

இந்தியன் ரயில்வேயின்  பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் இந்த தனியார் ரயில் இயக்கப்படுகிறது. இந்தத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்  தொடங்கப்பட்டது. சதர்ன் ஸ்டார் ரயில் என்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனம்தான் இந்த ரயிலை இயக்குகிறது. இது கோவையை சேர்ந்த நிறுவனம் .  மேலும் ஃபூட்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இந்த நிறுவனம் இருக்கிறது.

இந்த நிறுவனம் தெற்கு ரயில்வேயிடம் ரூ.1 கோடியை டெபாஸிட்டாக செலுத்தியுள்ளது. 20 ரயில் பெட்டிகளுக்கு இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் தொகையாக ரூ 27.79 லட்சத்தை இந்நிறுவனம் செலுத்தியுள்ளது. மேலும் பொருள் போக்குவரத்துக்காக காலாண்டு கட்டணமாக ரூ.76.77 லட்சம் செலுத்த வேண்டும். இதில் ஜிஎஸ்டி தொகை சேராது.

பயணிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள்

ஒரு ஏசி முதல் வகுப்பு,  2 டையர் ஏசி வகுப்பு மூன்று, 3 டையர் ஏசி வகுப்பு எட்டு, மேலும் ஐந்து ஸ்லீப்பர் வகுப்புகள் உள்ளன. மேலும் அவசரத் தேவைக்காக மருத்துவர்கள்  பணியில் இருப்பார்கள். மேலும் எல்லா ரயில் பெட்டியிலும் எப்போதும் பணியாளர்கள் இருப்பார்கள். மேலும் பயணிகள் பணியாளர்களை தொடர்பு கொள்ள வசதிகள் இருக்கும்.  மேலும் பக்தி பாடல்கள் பயணம் முழுக்க ஒளிபரப்பப்படும்.

ஒரு ஒட்டுமொத்த ஆன்மீக சுற்றுலா பேக்கேஜை தனியார் நிறுவனம் பயணிகளுக்கு வழங்கிறது. சிறப்பு தரிசனம் , தங்கும் வசதி என்று ஒரு ஒட்டுமொத்த டூர் பேக்கேஜை வழங்கிறது.

 பாரத் கவுரவ் திட்டம் எப்படி செயல்படுகிறது ?

ஒரு நிறுவனமோ அல்லது சேவை வழங்கும் நிறுவனமோ அல்லது தனி நபரோ குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியன் ரயில்வேயிடம் இருந்து ரயிலை பெற்று இயக்க முடியும். ஒப்பந்த காலம் குறைந்தது 2 ஆண்டுகளாக இருக்கும். அதற்கு மேலகாவும் நாம் காலத்தை நீட்டித்துகொள்ளலாம். மேலும் அந்த நிறுவனமே ரயில் எங்கே நிற்க வேண்டும். மேலும் எந்த வழி மார்கமாக செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.

மேலும் இந்த வியாபார திட்டத்தில் ரயில் பயணம் மட்டும் இல்லாமால். ஓட்டு மொத்த டூர் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. ஆன்மீக சுற்றுலா அல்லது நிறுவனம் விரும்பும் இடத்திற்கு ஏற்பட  இந்தியன் ரயில்வேயிடம் பல செயல் திட்டங்கள் இருக்கிறது.

இதில் இந்தியன் ரயில்வேயின் பங்கு என்ன?

ரயிலை இயக்க ஓட்டுநர் மற்றும் சக பணியாளர்கள், பழுது பார்க்கும் பணியாளர்கள் ஆகியவர்களை ரயில்வே துறையே வழங்குகிறது. மேலும் எந்த வழியில் ரயில் செல்கிறதோ, அப்போது வேறு ரயில்கள் இருந்தால் அதற்கு ஏற்ப வழித்தடத்தில் மாற்றம் செய்யும் பணியை இந்தியன் ரயில்வே மேற்கொள்ளும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment