இந்திய ரயில்வே மற்றும் இந்திய தபால் துறை ஆகிய மத்திய அரசின் துறைகள் இணைந்து 'எக்ஸ்பிரஸ் கார்கோ சேவை' எனும் பார்சல் சேவையினை பல்வேறு மாநிலங்களில் வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதன் முறையாக எக்ஸ்பிரஸ் கார்கோ சேவை கோவை ரயில் நிலையத்தில் புதன்கிழமை (ஜன.25) தொடங்கியது.
Advertisment
முதற்கட்டமாக 480 கிலோ எடை அளவிலான பார்சல்கள், கோவையிலிருந்து சென்னைக்கு 'சதாப்தி எக்ஸ்பிரஸ்' ரயிலில் அனுப்பப்பட்டன.
இந்த சேவையை கோவையில் இருந்து ரயில்வே சேலம் கோட்ட, அசிஸ்டன்ட் கமர்சியல் மேனேஜர் (ACM) பாண்டுரங்கா மற்றும் தபால் துறை, ரயில்வே துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
'ஜாயிண்ட் பார்சல் ப்ராடக்ட்' எனப்படும் இத்திட்டத்தில் பார்சல்கள் புக் செய்யும் இடத்திலிருந்து தபால் துறை மூலம் பெறப்பட்டு, ரயில்வே மூலம் கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் தபால் துறையின் மூலம் உரிய இடத்திற்கு சென்று வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பி. ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/