Advertisment

ரிலையன்ஸ் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை ரூ.43 ஆயிரம் கோடிக்கு வாங்கிய பேஸ்புக்

Facebook - Reliance Jio deal : வாட்ஸ்அப்பின் உதவியுடன். ஜியோவின் சிறுதொழில் சேவையான ஜியோமார்ட் சேவையை மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
facebook jio investment, reliance jio, facebook takes stake in jio, mark zuckerberg, mukesh ambani, business news, indian express, facebook - jio news, facebook - jio news in tamil, facebook - jio latest news, facebook - jio latest news in tamil

facebook jio investment, reliance jio, facebook takes stake in jio, mark zuckerberg, mukesh ambani, business news, indian express, facebook - jio news, facebook - jio news in tamil, facebook - jio latest news, facebook - jio latest news in tamil

Nandagopal Rajan

Advertisment

சமூகவலைதளங்களில் ஜாம்பவானாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை, ரூ. 43,574 கோடி (அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 5.7 பில்லியன்) வாங்கியுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இது உலகில் எங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தால் சிறுபான்மை பங்குகளுக்கான மிகப்பெரிய முதலீடு என்றும், இந்தியாவில் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது. . இதன்மூலம், இந்திய தொலைதொடர்பு துறையில், பேஸ்புக் நிறுவனம் கால்பதித்துள்ளது.

பேஸ்புக் - ஜியோ இடையயோன இந்த ஒப்பந்தத்தால் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு 65.95 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனம் மார்க் சூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த முதலீடு தொடர்பான ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில், இந்த இரு நிறுவனங்களும் முக்கிய தொலைதொடர்பு மற்றும் வர்த்தக திட்டங்களில் இணைந்து பணியாற்ற இயலும்.

கொரோனா பீதி காரணமாக, உலகமே முடங்கிப்போயுள்ள நிலையில், சிறுதொழில்முனைவோர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களது வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்ள முன்வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தங்களது இந்த ஒப்பந்தம் உதவும். இந்திய மக்கள் மற்றும் அவர்களது வர்த்தகம் தொடர்பாக புதிய வழிமுறைகள் மேற்கொள்ள தங்களது இந்த நடவடிக்கை உறுதுணையாக இருக்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் நிறுவன தலைமை வருவாய் அலுவலர் டேவிட் பிஷ்சர் மற்றும் பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் ஜியோ சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படும். அடுத்த 4 ஆண்டுகளுக்குள், ஜியோ ஆன்லைன் சேவையில் மேலும் கூடுதலாக 388 மில்லியன் மக்கள் இணைவர். மக்களின் புதுமையான கிரியேட்டிவ் உத்திகளுடன் தங்களது வர்த்தகத்தை அவர்கள் விரிவுபடுத்திக்கொள்ள ஜியோ சேவைகள் துணை நிற்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் - ஜியோ ஒப்பந்தம் குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது, இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் மேம்பாடு அடையவும், நாட்டு மக்கள் பலன்பெறவும், எங்களது இந்த ஒப்பந்தம் வழிவகை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரங்களான எளிய வாழ்க்கை, வர்த்தகத்திற்கு ஏற்ற சூழலை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், யார் ஒருவரையும் தவிர்க்காமல் உதவ தங்களது இந்த ஒப்பந்தம் உறுதுணை புரியும். உலகமே, கொரோனா பீதியில் உறைந்துள்ள நிலையில், இந்த பேரிடருக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் விரைவில் மேம்பாடு அடைய தங்களது இந்த ஒப்பந்தம் துணைபுரியும்.

288 பில்லியன் மக்கள் புதிதாக ஜியோ சேவையில் இணைவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன்மூலம் பில்லியன் ஆன்லைன் என்ற பேஸ்புக்கின் நனவாகும். பேஸ்புக் நிறுவனம் கிராமப்பகுதியில் முழுவதும் விலையில்லா இணையதள வசதியை, வைபை உதவியுடன் வழங்கிவருவதால், பல்லாயிரக்கணக்கானோர் டிஜிட்டல் யுகத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளதுடன் டிஜிட்டல் தயாரிப்புகளின் நுகர்வையும் அவர்கள் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள எல்லா வர்த்தங்களிலும் புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். நாட்டில் சுமார் 60 மில்லியன் சிறுதொழில்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களாலேயே, நாட்டில் பெரும்பாலோனாருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் நிகழ்ந்து வரும் நிலையில், மக்களுக்கும், அவர்கள் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி பெறவும் தங்களது இந்த ஒப்பந்தம் உதவும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தை ஏற்கனவே தன்வசப்படுத்தியுள்ள பேஸ்புக் நிறுவனம், இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய வாய்ப்புகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பின் உதவியுடன். ஜியோவின் சிறுதொழில் சேவையான ஜியோமார்ட் சேவையை மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம். இதன்மூலம், மக்கள் பொருட்கள் வாங்குவது மேலும் எளிமையாக்கப்படும். இந்தியாவில் வாட்ஸ்அப் மூலமான டிஜிட்டல் பேமெண்ட் சேவை துவங்குவதற்கான அனுமதிக்காக வாட்ஸ்அப் நிறுவனம் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Mukesh Ambani Whatsapp Mark Zuckerberg Reliance Jio Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment