Advertisment

பி.எஃப்., கிராஜூவிட்டிய சரியா பயன்படுத்திகிட்டா வாழ்க்கை நிம்மதி தான்!

எனவே உங்களுக்கு ரொம்ப அவசர தேவைக்கு பணம் வேண்டியதில்லைன்னு ஒரு முடிவுக்கு வந்தா ஓய்வு பெற்ற மூனு வருசத்துக்கு பி.எஃப். பணத்துல கை வைக்காதீங்க. பணம் வளரட்டும்… வட்டியும் தாங்க

author-image
WebDesk
New Update
பி.எஃப்., கிராஜூவிட்டிய சரியா பயன்படுத்திகிட்டா வாழ்க்கை நிம்மதி தான்!

Financial decisions to take with your PF and Gratuity corpus : நம்முடைய வருமானத்தை நாம் என்ன தான் மிச்சம் செஞ்சு சேமிச்சு வச்சாலும், இன்ஸ்யூரன்ஸ் போட்டு வச்சாலும். திடீர்ன்னு ஒரு செலவு வந்து கைய கடிக்கும். நெறைய பேரு ரிட்டயர்மெண்டுக்கு பின்னாடி செலவுக்கு என்ன பண்றதுன்னு சேத்து வைக்கவே மறந்து போய்ட்றோம். பணம் வீக்கம் நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டு போறதால என்ன தான் வங்கில சேத்து வச்சாலும் கூட அது கொஞ்சம் நாளைக்கு தான் வரும்.

Advertisment

அரசு இல்லைன்னா தனியார் துறைல இருந்து ஓய்வு பெற்றால் ஓய்வூதியம் கிடைக்குமே வச்சு ஜமாய்ச்சுறமாட்டோமா அப்டின்னு கேக்க தோணும். ஆனாலும் பாருங்க என்னதான் ஓய்வூதியம் வாங்குனாலும் அன்னைக்கு கால கட்டத்துக்கு இருக்குற தேவைக்கு அது பத்துமா அப்டினு உங்கள நீங்களே கேட்டு பாருங்க…

சரி அதுக்கு இப்போ என்னதான் செய்றதுன்னு கேட்டால், அதுக்கும் பதில் உங்க கிட்டயே இருக்கு. அதாவது உங்க சம்பளத்துல இருந்து மாசம் மாசம் பிடிக்குற பி.எஃப். மற்றும் கிராஜூவிட்டி உங்கள ரிட்டயர்மெண்ட் காலத்திலையும் காப்பாத்தும்னு சொல்றோம். எப்படின்னு கேக்குறீங்களா? உங்க கேள்விக்கு விடை இங்கே !

பி.எஃப். பணம்

இந்தியாவில் இருக்கும் சேமிப்பு திட்டங்களில் மிகவும் அதிகமான வட்டியை பெறுகின்ற முக்கியமான அம்சமாக இருக்கிறது பி.எஃப். இதோட வட்டி விகிதம் மட்டும் 8.5% ஆகும். மேலும், நீங்க வேலையை விட்டு நின்ற பிறகும் கூட சுமார் 36 மாதங்களுக்கு இந்த கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் உங்களோட தொகைக்கு வட்டி கிடைச்சுட்டே இருக்கும். அதாவது நீங்க வர்ற மார்ச் 31ம் தேதியோட வேலையவிட்டு நிக்கிறீங்கன்னு வச்சுக்குவோம். உங்களுக்கு அடுத்த மூன்று நிதியாண்டுக்கான வட்டி உங்களுக்கு கூடுதலா கிடைக்கும்.

ரொம்பவே இண்ட்ரெஸ்ட்டிங்கான விஷயம் இதுல என்னன்னா நீங்க உங்க சம்ளத்துல இருந்து பிடிச்ச பணத்துக்கு மட்டும் வட்டியை பெறாமல் கூடுதலாக உங்களோட வட்டிக்கான வட்டியும் இதில் வரவு வைக்கப்படும். எனவே உங்களுக்கு ரொம்ப அவசர தேவைக்கு பணம் வேண்டியதில்லைன்னு ஒரு முடிவுக்கு வந்தா ஓய்வு பெற்ற மூனு வருசத்துக்கு பி.எஃப். பணத்துல கை வைக்காதீங்க. பணம் வளரட்டும்… வட்டியும் தாங்க

இருக்குற கடனை எல்லாம் கட்டி முடிக்குற வழிய பாருங்க

கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்சு நிலம் வாங்கி வீடு கட்ட ஆரம்பிச்சுருப்பீங்க… நெனச்சத்த விட செலவு அதிகமா போகுதுன்னு நீங்க வங்கிகளில் லோன் வாங்கிருப்பீங்க… ஆனால் ஓய்வு பெற்றதும் மொதல் வேலையா இருக்குற கடனையெல்லாம் அடச்சு முடிச்சுருங்க.. உங்க பி.எஃப். பணம் இல்லைன்னா உங்க கிராஜூவிட்டி பணத்தை வச்சு முத வேலையா அத பாருங்க. இது உங்கள் அதிகப்படியான நிதி சுமைல்ல இருந்து விடுவிக்கும்.

ரிஸ்க் குறைவா இருக்குற திட்டங்கள்ல முதலீடு செய்யுங்க

பங்கு சந்தைகள்ன்னு சொன்னாலே ரிஸ்க் தான். பென்சன் பணத்தை மட்டும் நம்பியே எப்படி காலத்த கழிக்கிறது. ஓய்வு காலங்களில் உங்களுக்கு கணிசமான அளவு நேரம் கிடைக்கும். குடும்பத்தினர், துணை, குழந்தைகளோட நேரம் செலவிட்டது போக இருக்குற நேரத்துல ஏதாவது ஒன்னு கத்துக்கங்க.. மார்க்கெட் பத்தியும் அதுல இருக்குற ரிஸ்க் பத்தியும், எதுல முதலீடு செஞ்சா அபாயங்கள் குறைவாக இருக்கும்னு பாத்து அதப்படுத்தி கொஞ்சம் ஆராயுங்க.. அதுல முதலீடு செஞ்சா கிடைக்கும் ரிட்டர்ன்ஸ் என்ன என்பதை பத்தி ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்க… இது கட்டாயம் உங்களுக்கு உதவியா தான் இருக்கும்.

பணப்புழக்கம் எப்போதும் இருப்பதை உறுதி செய்யுங்க…

ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை தான் உங்களோட முதலீட்டுல இருந்து வட்டி கிடைக்கும் ஆப்ஷன்ஸ் ஏதாவது தேர்வு செஞ்சிருந்தா அத மாத்துங்க.. காலாண்டு இல்லைன்னா 6 மாதங்களுக்கு ஒரு தடவ உங்களுக்கு வட்டி கிடைக்குறத உறுதி செஞ்சுக்கங்க.. ஒரு உதாரணத்துக்கு சொல்றோம், ஒரு வேளை நீங்க ஒரு ரூ. 10 லட்சத்தை 5 வருசத்துக்கு மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்துல தபால் நிலையங்கள்ல முதலீடு செய்றீங்கன்னு வச்சுக்கங்க, உங்களுக்கு 7.4% வட்டி கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு ரூ. 74 ஆயிரம். இந்த பணத்தை நீங்க மொத்தமா வாங்குறதுக்கு பதிலா காலாண்டுக்கு ஒரு முறை ரூ. 18,500 ஆக வாங்கிக் கொள்ளலாம். ஐந்து வருடத்திற்கு இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் மொத்த வருமானம் மட்டும் ரூ. 3,70,000-ம்னா பாத்துக்கங்க…

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment