இந்த 3 வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவரா நீங்கள்? உங்களின் தொகைக்கு எவ்வளவு வட்டி விகிதம் தெரியுமா?

5 Year Tax-Saving FD Interest Rates: ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மாறும்.

பிரபலமான வங்கிகளான எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற வங்கிகளில் நீங்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடர்ந்து வந்தால், உங்களின் திட்டத்திற்கு அவர்கள் அளிக்கும் வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா?

5 Year Tax Saving FD Interest Rates Offered by Top Banks: பிக்சட் டெபாசிட்:

மக்களிடம் சேமிக்கும் பழகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்திய நிதி நிறுவனங்கள் சாதாரணச் சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி விகித லாபம் அளிக்க வேண்டிய ஒரு திட்டமாக பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

Read More: பொதுமக்களே உஷார்.. உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் வங்கி ஏடிஎம்- கள் விரைவில் மூடப்படலாம்!

Read More: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு செம சான்ஸ்..உங்களுக்காகவே 3 புதிய திட்டங்கள்!

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது என்ன வட்டி விகிதம் கூறுகிறார்களோ அது முதிர்வு காலத்தின் போது குறைவில்லாமல் கிடைக்கும். இதுவே சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றால் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மாறும்.

எனவே இந்தியாவின் டாப் 3 வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அளிக்கும் வட்டி விகிதம் எவ்வளவு என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

எஸ்பிஐ வங்கி:

எஸ்பிஐ வங்கியில்  5 வருடத்திற்கு  தொடரப்பட்டிருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1கோடி ரூபாய் வரை சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 6.85 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.35 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கி:

ஐசிஐசிஐ வங்கியில், 1 கோடி வரையில் சேமிக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

எச்டிஎப்சி வங்கி :

எச்டிஎப்சி வங்கியை பொருத்தவரையில் 5 வருடத்திற்கு  தொடரப்பட்டிருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1கோடி ரூபாய் வரை சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close