Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.5 சதவீதம் வட்டி: எந்த வங்கியில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

மூத்த குடிமக்களுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதம் 9.5% ஆக உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
10 schemes with 34 PC to 40 PC SIP returns

கடந்த 3 ஆண்டுகளில் 40 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த சிறந்த மிட்கேப் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

தற்போது மூத்த குடிமக்களுக்கான வைப்பு வட்டி விகிதம் 9.5% ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இரண்டு சிறிய நிதி வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 9.5% அல்லது அதற்கு மேற்பட்ட வட்டி விகிதத்தையும் மற்றவர்களுக்கு 9%க்கும் மேல் வட்டி விகிதத்தையும் வழங்குகின்றன.

Advertisment

அதாவது, சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (SSFB) 5 ஆண்டுகளுக்கு 2 கோடி ரூபாய்க்கும் குறைவான மூத்த குடிமக்கள் வைப்புத்தொகைக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை 9.6% ஆக உயர்த்தியுள்ளது.

வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு, வங்கி 9.1% வட்டி வழங்குகிறது. தொடர்ந்து, யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 9.5% ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியையும் மற்றவர்களுக்கு 9% வரையும் ரூ. 2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு வட்டி வழங்குகிறது.

பொதுத்துறை வங்கிகளில், எஸ்பிஐ 7.6% வரை வட்டி வழங்குகிறது. தனியார் வங்கிகளில் ஹெச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.75% வரை வட்டி வழங்குகிறது. ஆக்சிஸ் வங்கி 7.95% வரை வட்டி வழங்குகிறது, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி 8.25% வரை வட்டி வழங்குகிறது.

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

வங்கி FD விகிதங்கள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ விகிதத்தை அதிகரித்தால் மேலும் உயரக்கூடும்.

மேலும், FDகள் உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு சந்தையுடன் இணைக்கப்பட்ட தயாரிப்புகளை விட பாதுகாப்பானதாகவும் கருதப்படுகின்றன.

எனினும் ஸ்மால் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையே காப்பீடு வழங்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்வது உகந்தது. எனினும், பொதுத்துறை வங்கிகளில் இந்த விதி கிடையாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment