நம்ம மொழியில் வந்தாச்சு பிளிப்கார்ட்: என்ன திட்டம் தெரியுமா?

Flipkart :அடுத்து சிறு நகரங்களிலிருந்து சுமார் 100 மில்லியன் பயனர்கள் ஆன்லைன் மூலம் டிஜிட்டல் முறையில் பொருட்கள் வாங்க வருவார்கள்.

By: Published: June 27, 2020, 8:04:36 AM

Flipkart In Tamil: உள்ளூர் மக்களுடனான தனது இணைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்ளூர் மக்கள் அவர்களது சொந்த மொழியில் பொருட்கள் வாங்க ஏதுவாக வாட்மார்ட்டுக்கு உரிமைப்பட்ட ப்ளிப்கார்ட் (Flipkart) இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளை தனது marketplace ல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏற்கனவே உள்ள ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளுடன் கூடுதலாக பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அமேசான் நிறுவனம் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளை மட்டுமே தற்போது வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த மொழியில் பொருட்கள் வாங்குவதற்காக ப்ளிப்கார்ட்டின் புதிய interfaces, “Flipkart’s ‘Localization and Translation Platform’” கட்டப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவிக்கிறது.

அடுத்து சிறு நகரங்களிலிருந்து சுமார் 100 மில்லியன் பயனர்கள் ஆன்லைன் மூலம் டிஜிட்டல் முறையில் பொருட்கள் வாங்க வருவார்கள் அவர்களை கவருவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியே இதுவாகும்.

Bain & Company மற்றும் ப்ளிப்கார்ட் ஆகியவற்றின் சமீபத்திய How India Shops Online என்ற ஆய்வறிக்கையின்படி ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கும் மொத்த வாடிக்கையாளர்களில், இரண்டாம் அடுக்கு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலிருந்து வாங்குபவர்கள் தான் 50 சதவிகித பங்களிப்பு செய்யப்போகிறார்கள். மேலும் இவர்கள், மெட்ரோ நகரங்கள் மற்றும் முதல் அடுக்கு நகரங்களில் உள்ள மக்கள் வாங்கும் பொருட்களைப் போலவே இவர்களும் வாங்குகிறார்கள், சராசரி விற்பனை விலையில் உள்ள ஒரு சிறிய வித்தியாசத்தை தவிர. எடுத்துக்காட்டாக இரண்டாம் அடுக்கு மற்றும் சிறிய நகரங்களில் விற்பனையாகும் கைபேசிகளின் சராசரி விற்பனை விலை ரூபாய் 9,258/-. ஆனால் இது மெட்ரோ மற்றும் முதல் அடுக்கு நகரங்களில் உள்ளதை விட ரூபாய் 10,067/- வெறும் 8 சதவிகிதம் மட்டுமே குறைவு.

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் டிஜிட்டல் முறையில் பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை 100 -110 மில்லியனாக இருந்ததிலிருந்து அதிகரித்து, 2025 ஆம் ஆண்டு வாக்கில் 300 -350 மில்லியனாக வர வாய்ப்புள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது. இந்திய மொழிகளில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு வாக்கில் இந்திய இணைய பயனர்களின் எண்ணிக்கையில் 75 சதவிகித பங்கை கொண்டிருக்கக்கூடும், என தொழில்துறை அறிக்கையை மேற்கோள்காட்டி ப்ளிப்கார்ட் தெரிவிக்கிறது.

மொழி, நன்கு தீர்க்கப்பட்டால், மில்லியன் கணக்கான நுகர்வோரை அடைய ஒரு தடையாக இல்லாமல் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம், என Flipkart குழுமத்தின் Chief Executive Officer கல்யான் கிருஷ்ணமூர்த்தி ஒரு அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Online shopping amazon flipkart tamil telugu kannada ecommerce south india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X