Advertisment

வருமான வரி தாக்கல் முதல் பிடித்த சேனல் வரை அனைத்தையும் முடிக்க இன்றே இறுதி நாள்!

வருமான வரித் துறையின் இணையத்தளமான - incometaxindia.gov.in  தளத்தில் வெவ்வேறு விதத்தில் ஆதாருடன் பேன் எண்ணை இணைக்கும் வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Income tax filling

US individual income tax return form with pen and calculator

2018 - 2019-க்கான நிதியாண்டு இன்றோடு நிறைவடைகிறது. இந்நாளில் சில முக்கிய விஷயங்களை மக்கள் மறக்காமல் செய்ய வேண்டியிருக்கிறது.

Advertisment

லேட்டானதற்கு 10,000 ஃபைனுடன் சேர்த்து இன்று வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். நாளை முதல் ட்ராய் ரூல்ஸ் நடைமுறைக்கு வருவதால், தங்களுக்குப் பிடித்த டி.வி.சேனல்களை இன்றே தேர்ந்தெடுக்க வேண்டும்.

இன்று செய்து முடிக்க வேண்டியவை

வருமான வரி தாக்கல்

2017-18-ஆம் நிதியாண்டிற்கான வருடாந்திர  வருமான வரி அல்லது 2018-19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரியை மார்ச் 31, 2019-க்குள் செலுத்த வேண்டும். கடந்த நிதியாண்டில் தங்கள் வருமான வரித் தவணையை தாக்கல் செய்யாதவர்கள், 10,000 ரூபாய் அபராதத்துடன் இன்று செலுத்த வேண்டும்.

மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக் கிழமையான இன்று, இறுதி நாளில் வரி செலுத்துவோருக்கு உதவுவதற்காக, IT அலுவலகமும் ஜி.எஸ்.டி அலுவலகமும் திறந்திருக்கும்.

ஆதாருடன் பேன் இணைப்பு

வருமான வரி தாக்கல் செய்ய, ஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை (PAN எண்) இணைத்தல் கட்டாயம். மார்ச் 31-க்குள் இணைக்கப்படவில்லை என்றால், பான் எண் முடங்கும் வாய்ப்புகள் உள்ளன.

வருமான வரித் துறையின் இணையத்தளமான - incometaxindia.gov.in  தளத்தில் வெவ்வேறு விதத்தில் ஆதாருடன் பேன் எண்ணை இணைக்கும் வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

IT துறையின் மின் தாக்கல் (e-filing portal) முறையிலும் incometaxindiaefiling.gov.in என்ற தளத்தின் மூலம் ஆதார் எண்ணுடன், பேனை இணைக்கலாம். இதற்கு முகப்பு பக்கத்தில், ’link Aadhaar' என்பதைக் க்ளிக் செய்தால் போதும்.

உங்களுக்குப் பிடித்த சேனல்களை தேர்வு செய்துக் கொள்ளுங்கள்

வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த சேனல்களை தேர்வு செய்துக் கொள்ள, The Telecom Regulatory Authority of India  எனப்படும் ட்ராய்யின் கெடு இன்றுடன் முடிவடைகிறது.

வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் பொறுத்து, கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் டி.டி.ஹெச் நிறுவனங்கள், சிறப்பு திட்டங்களை வழங்கலாம் என ட்ராய் தெளிவுப் படுத்தியுள்ளது.

டாடா ஸ்கை, ஏர்டெல், வீடியோகான், டிஷ் டி.வி, போன்ற டி.டி.ஹெச் தளங்களில் லாக் இன் செய்து, வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சேனல்களை தேர்வு செய்துக் கொள்ளலாம்.

TRAI-ன் இந்த புதிய விதிகள் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ள உதவுகின்றன. இருப்பினும் இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்ற குழப்பத்தில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

சந்தாதாரர்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்ற நோக்கில் தான் இந்தச் செயல்முறை நடைமுறைப் படுத்தப்படுவதாக ட்ராய் அதன் பிரஸ் ரிலீஸில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக, மேற்கூறிய இவற்றை எல்லாம் நீங்கள் செய்து விட்டீர்களா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்!

Income Tax Return Filing Trai Income Tax Returns
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment