Advertisment

பெட்ரோல் வரியில் ரூ.3.72 லட்சம் கோடியை வசூலித்த மத்திய அரசு; மாநிலங்களுக்கு குறைவான பங்கீடு

2014-15 ஆம் ஆண்டில், பகிர்ந்து கொள்ளக்கூடிய மத்திய வரிகளின் நிகர வருவாயில் மாநிலங்களின் பங்கு 32 சதவீதம், இப்போது 41 சதவீதம். 2011-12 மற்றும் 2020-21 க்கு இடையில் மொத்த வரி வசூலில் செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களின் பங்கு நான்கு மடங்குக்கும் அதிகமாக உயர்வு - நிதி அமைச்சக தரவு

author-image
WebDesk
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

 Sunny Verma

Advertisment

Fuel taxes: Centre rakes in Rs 3.72 lakh crore, low basic excise duty limits states’ share: பெட்ரோலுக்கு மத்திய அரசு வசூலித்த வரி, 2014ல் லிட்டருக்கு ரூ.9.48ல் இருந்து, 2021ல் ரூ.27.90 ஆக கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அதேநேரம், இந்த வரி வசூலில் மாநிலங்களின் பங்கு அதே காலகட்டத்தில் லிட்டருக்கு ரூ.0.38ல் இருந்து ரூ.0.57 ஆக உயர்ந்துள்ளது. மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி ஒன்றுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த பதிலின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014-15 ஆம் ஆண்டில், பகிர்ந்து கொள்ளக்கூடிய மத்திய வரிகள் மற்றும் இதர வரிகளின் நிகர வருவாயில் மாநிலங்களின் பங்கு 32 சதவீதமாக இருந்தது, அது இப்போது 41 சதவீதமாக உள்ளது. 2011-12 மற்றும் 2020-21 க்கு இடையில் கடந்த பத்தாண்டுகளில் மொத்த வரி வசூலில் செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களின் பங்கு நான்கு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றும் நிதி அமைச்சகத்தின் தரவு காட்டுகிறது.

2011-12ல் வசூலித்த ரூ.92,996.51 கோடியில் இருந்து, 2020-21ல் ரூ.4,09,481.16 கோடியை செஸ் மற்றும் கூடுதல் கட்டணமாக மத்திய அரசு வசூலித்துள்ளது. இந்த வசூல் மாநிலங்களுடன் பகிரப்படவில்லை. "வரிகளைப் பகிர்வதற்கான அரசியலமைப்புத் திட்டத்தின்படி செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவை பகிர்வு தொகுப்பில் சேர்க்கப்படவில்லை" என்று சௌத்ரி கூறினார். 15வது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, 2021-26 பங்கு காலத்திற்கான வரி ரசீதில் 41 சதவீதத்தை மத்திய அரசு மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வசூல் அதிகரிப்பது என்பது மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு விகிதாச்சாரத்தில் குறைகிறது. மொத்த வரி வருவாயில் செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களின் பங்கு FY12ல் 10.4 சதவீதத்தில் இருந்து 21ம் நிதியாண்டில் 19.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பல மாநில நிதி அமைச்சர்கள் சமீபத்தில் மத்திய அரசால் வசூலிக்கப்படும் செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களின் அனைத்து அல்லது சில பகுதிகள், மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் பகிர்வு தொகுப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று வாதிட்டனர். செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவை தற்போது நிதி ஆயோக்கின் ஆணைக்கு உட்பட்டது அல்ல, ஏனெனில் இந்த வசூல் பகிர்வு தொகுப்பின் பகுதியாக இல்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின் 269 மற்றும் 270 வது பிரிவைத் திருத்தியமைத்து இவைகளை பகிர்வு தொகுப்பின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். செஸ் வரி என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, ஒரு நிறுவனம் அல்லது தனிப்பட்ட வரி செலுத்துபவரின் அடிப்படை வரிப் பொறுப்பு மீது விதிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் என்பது வரியின் மீதான வரியாகும், அதை மத்திய அரசாங்கம் தேவைப்படும் நோக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மத்திய அரசின் பெட்ரோலிய வரிகளில் மாநிலங்களின் பங்கு குறைவாகவே உள்ளது, ஏனெனில் மற்ற வரிகள் உயர்த்தப்பட்டதைப் போல அடிப்படை கலால் வரி உயர்த்தப்படவில்லை. 2021 நிதியாண்டில், பெட்ரோலியப் பொருட்களிலிருந்து ரூ. 3.72 லட்சம் கோடி வரிகளை (கலால் வரி மற்றும் செஸ்) மத்திய அரசு வசூலித்துள்ளது, இது 2020 நிதியாண்டில் ரூ.2.23 லட்சம் கோடியாக இருந்தது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான மொத்த கலால் வரிகள் பலமடங்கு உயர்ந்தாலும், பெட்ரோலின் அடிப்படை கலால் வரி 2014ல் லிட்டருக்கு ரூ.1.2ல் இருந்து 2021ல் லிட்டருக்கு ரூ.1.4 ஆக உயர்த்தப்பட்டது. மாநிலங்களுடனான பெட்ரோலிய வரிகள் அடிப்படை கலால் வரியிலிருந்து மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பெட்ரோலியப் பொருட்களுக்கு கூடுதல் கலால் வரி மற்றும் செஸ்களையும் மத்திய அரசு விதிக்கிறது.

“மாநில அரசுகளுக்கு அதிகாரப் பகிர்வு என்பது, அவ்வப்போது நிதி ஆயோக் பரிந்துரைக்கும் ஃபார்முலாவின் அடிப்படையிலான அடிப்படை கலால் வரிக் கூறுகளிலிருந்து உருவாக்கப்படுகிறது. பெட்ரோல் மீதான தற்போதைய மொத்த கலால் வரி லிட்டருக்கு ரூ. 27.90. இதில் அடிப்படை கலால் வரி, ஒரு லிட்டருக்கு ரூ.1.4" என்று சௌத்ரி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Petrol Diesel Rate Business Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment