கோ ஏர் விற்பனை 2020 – கோடை காலத்தில் ஒரு ஜாலி ட்ரிப்; ரூ.995 முதல்

Go Air Summer Sale 2020: இந்த சலுகைகளை பெற விரும்பும் பயணிகளுக்கு கோ ஏர் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விகுத்துள்ளது. விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் போது பொருந்தும் ’blackout dates’ ஐ பயணிகள் சரிபார்த்துக் கொள்ளவும்.

By: Updated: March 6, 2020, 07:10:57 PM

Go Air Rs. 995, 5799 Summer Offer: இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள உங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு குறைந்த விமான பயணக் கட்டணமான ரூபாய் 995/- மற்றும் ரூபாய் 5,799/- ல் பயணிக்கலாம். உள்நாட்டு கட்டணம் ரூபாய் 995/- (அனைத்தும் உட்பட) முதலும், சர்வதேச விமான கட்டணமாக ரூபாய் 5,799/- ம் உங்களுக்கு செலவாகும். கோ ஏர் விமான நிறுவனத்தின் கோடை கால விற்பனை முன்பதிவு துவங்கிவிட்டது. கோ ஏர் கோடைகால விற்பனை மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பெற, நீங்கள் உங்கள் கோடை கால பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்த Yes Bank – ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க அனுமதி

கோ ஏர் விமான பயணச்சீட்டு கட்டண பட்டியல்

புறப்படும் இடம் – சேரும் இடம் – கட்டணம் ரூபாயில்

அகமதாபாத் – இந்தூர் – 955

இந்தூர் -அகமதாபாத் – 1214

டெல்லி – சண்டிகர் –  1222

பாக்டோகிரா – குவஹாத்தி –  1258

சென்னை – ஹைதராபாத் – 1295

குவஹாத்தி –  கொல்கத்தா – 1314

பாட்னா – ராஞ்சி – 1356

புனே – பெங்களூரு – 1399

சண்டிகர் – டெல்லி – 1418

பெங்களூரு – புனே – 1436

ஜம்மு –  ஸ்ரீநகர் –  1486

லக்னோ – டெல்லி – 1499

ஹைதராபாத் –  சென்னை – 1524

ஐஸ்வால் – குவஹாத்தி –  1526

கொல்கத்தா – பாக்டோக்ரா – 1527

ஸ்ரீநகர் – ஜம்மு – 1527

மும்பை – பெங்களூரு – 1748

புவனேஸ்வர் –  கொல்கத்தா –  1759

கொச்சி –  பெங்களூரு – 1795

ஜெய்ப்பூர் – அகமதாபாத் – 1849

ராஞ்சி – டெல்லி – 1887

நாக்பூர் – பெங்களூரு – 1899

லே –  டெல்லி – 1961

வாரணாசி – டெல்லி – 1999

கண்ணூர் –  மும்பை – 2250

போர்ட் பிளேர் – சென்னை – 3330

அபுதாபி – கண்ணூர் – 5799

மஸ்கட் – கண்ணூர் – 6599

இந்த சலுகைகளை பெற விரும்பும் பயணிகளுக்கு கோ ஏர் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விகுத்துள்ளது. விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் போது பொருந்தும் ’blackout dates’ ஐ பயணிகள் சரிபார்த்துக் கொள்ளவும். கோ ஏர் வழங்கும் இந்த விமான பயணச் சீட்டு சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டண வகைகள் (fare types) மற்றும் fare products க்கு முழுவதும் செல்லுபடியாகும். பயணிகள் குழுவாக முன்பதிவு செய்யும் போது எந்த தள்ளுபடியும் இந்த சலுகையில் கிடைக்காது. குழந்தை முன்பதிவுகளுக்கு (Infant bookings) கோ ஏர் வழங்கும் இந்த விமான பயண கட்டண சலுகை பொருந்தாது. வேறு எந்த promotion or promo code களும் இந்த கோ ஏர் கோடை விற்பனை 2020 க்கு பொருந்தாது.

வீட்டுமனைகளில் அதிகம் முதலீடு செய்யும் மக்கள்! பங்கு சந்தைகளுக்கு இரண்டாம் இடம்!

கோ ஏர் கோடை விற்பனை 2020 சலுகையின் படி, இருக்கைகள் கிடைப்பது இருக்கைகளின் இருப்பு நிலவரத்தை பொருத்ததே. மேலும் பயணிகளுக்கு சாதாரண கோ ஏர் பயண உடமைகள் சலுகையே (baggage allowance) வழங்கப்படும். கூடுதல் பயண உடைமைகள் சலுகை தேவைப்படும் பயணிகளுக்கு சாதாரண பயணிகள் உடைமைகள் கொள்கையின்படி கட்டணம் வசூலிக்கப்படும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Go air sale 2020 fares start at rs 955

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X