Advertisment

10 கிராம் தங்கம் ரூ.60 ஆயிரத்தை தொடும்.. காரணம் இதுதான்?

2023 ஆம் ஆண்டில் மஞ்சள் உலோகம் தனித்து நிற்கும். முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துக்கள் நோக்கி செல்வதால், இந்திய சந்தையில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.60,000ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Markets Wrap Mon 6 Feb 23 Stocks tank rupee falls

இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மார்ச் மாதத்தில் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,070 என்ற உச்சத்தில் இருந்து நவம்பரில் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு $1,616 ஆக குறைந்தது.

அதன் பின்னர் தொடர்ந்து சீராக மீண்டு வருகிறது என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

தற்போது, மஞ்சள் உலோகத்தின் விலை சர்வதேச சந்தைகளில் அவுன்ஸ் $1,803 ஆகவும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83-ல் இருக்கும் நேரத்தில் MCX-ல் 10 கிராமுக்கு ரூ.54,790 ஆகவும் உள்ளது.

இந்த நிலை உலக பொருளாதாரம், பணவீக்கம், கிரிப்டோகரன்சிகள் என பாதுகாப்பற்ற போக்குகள் நீடித்துவருவதால் முதலீட்டாளர்கள், பொதுமக்கள் மஞ்சள் உலோகத்தில் முதலீடு செய்துவருகின்றனர்.

ஏனெனில், நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான புகலிடமாக தங்கத்தை அவர்கள் கருதுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

இதனால், இந்தாண்டு 10 கிராம் தங்கம் ரூ.60 ஆயிரம் வரை வாய்ப்புகள் உள்ளன.

இதற்கிடையில், ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பிற முக்கிய மத்திய வங்கிகள் மே 2022 இல் விகிதங்களை உயர்த்தத் தொடங்கியதில் இருந்து மஞ்சள் உலோகம் ஆதாயங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக ஜெம் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் முன்னாள் தலைவரும், காமா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநருமான கொலின் ஷா கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment