Advertisment

Gold, Silver Rate Today: ரூ60,000-ம் கீழே சரிந்த வெள்ளி; தங்கம் விலை நிலவரம் என்ன?

Gold prices continuously falling down and Silver falls below Rs 60,000 Tamil News: டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் இன்று தங்கம் விலை குறைந்தே காணப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gold price today, August 22

சென்னையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்

Gold price today in Chennai: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் நாணய விலையில் மாற்றம், இந்தியா மற்றும் அமெரிக்காவில் நிலவி வரும் பணவீக்கம், மத்திய வங்கிகளின் தங்கம் இருப்பு, வட்டி விகிதங்கள், நகைச் சந்தை, உக்ரைன் மீதான ரஷ்ய போர், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு காரணங்களாக இருப்பதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் தங்கத்தின் விலையை பாதிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Advertisment

இந்நிலையில், இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிவில் இருந்து வருகிறது. டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் இன்று தங்கம் விலை குறைந்தே காணப்படுகிறது. அந்த வகையில், தலைநகர் டெல்லியில் 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 900 குறைந்து 46,750 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 980 குறைந்து ரூ. 51,000 அக்காவும் விற்பனை செய்யப்படுகிறது.

publive-image

நிதித் தலைநகரான மும்பையில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 900 குறைந்து ரூ. 46,750 ஆகவும், 24 காரட் 10 கிராமுக்கு ரூ. 980. ரூ. 51,000 ஆகவும் விற்பனையாகிறது. கொல்கத்தாவிலும் இதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 59,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்:-

தங்கம் விலை:

publive-image

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.87 குறைந்து ரூ.4,683 ஆகவும், சவரனுக்கு ரூ. 696 குறைந்து ரூ.37, 464 ஆகவும் விற்பனையாகியது. மேலும், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.46,830 ஆகவும், 24 காரட் 10 கிராமுக்கு ரூ.51,090 ஆகவும் விற்பனை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று முற்பகல் 12 மணி நிலவரப்படி தங்கம் அதே விலையில் தான் நீடித்து வருகிறது.

publive-image

வெள்ளி விலை:

publive-image

நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.65.30 காசு ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.65,300க்கு விற்பனையாகியது.

இந்நிலையில், இன்று முற்பகல் 12 மணி நிலவரப்படி வெள்ளி அதே விலையில் தான் நீடித்து வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Gold Rate Business Business Update 2 Tamil Business Update Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment