Advertisment

குட் நியூஸ்.. சரிந்த தங்கம்.. புதிய விலை இதுதான்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராம் ரூ.10 குறைந்து விற்பனையாகிவருகிறது.

author-image
WebDesk
New Update
gold silver price

Gold Silver Price in Metropolitan Cities - 27th March 2023

Gold Silver Price Today, 27th March: சர்வதேச மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்தியாவில் தங்கத்தை ஏற்ற இறக்கத்தில் வைத்துள்ளன.

Advertisment

publive-image

இந்த நிலையில் கடந்த வாரங்களில் தங்கம் சவரன் ரூ.800 வரை அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் கிராமுக்கு ரூ.10ம், சவரனுக்கு ரூ.80ம் சரிந்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,540 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.44,320 என உள்ளது. 24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.6,061 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.48,488 ஆக உள்ளது.

சரியாக ஒரு வாரத்துக்கு முன்பு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,570 ஆக காணப்பட்டது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலையில் தொடர்கிறது. தற்போது கிராம் வெள்ளி ரூ.76 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.76 ஆயிரம் ஆக உள்ளது.

இம்மாத தொடக்கத்தில் வெள்ளி கிராம் ரூ.67 வரை காணப்பட்டது. அதாவது கிலோ வெள்ளி ரூ.67ஆயிரமாக இருந்தது. ஆக ஒரு மாதத்தில் மட்டும் வெள்ளி கிலோ 9 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,490 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.43,920 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.5 ஆகவும், சவரனுக்கு ரூ.40 சரிந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,988 என்று, சவரனுக்கு ரூ.47,904 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.11 ஆகவும், சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.73,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று வெள்ளி கிலோவுக்கு ரூ.100 சரிந்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,475 என்றும் சவரனுக்கு ரூ.43,800 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 ஆகவும், சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,973 ஆகவும் சவரனுக்கு ரூ.47,784 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.11 ஆகவும், சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.73,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று வெள்ளி கிலோவுக்கு ரூ.100 சரிந்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,475 என்றும் சவரனுக்கு ரூ.43,800 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 ஆகவும், சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,973 ஆகவும் சவரனுக்கு ரூ.47,784 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.11 ஆகவும், சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.73,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று வெள்ளி கிலோவுக்கு ரூ.100 சரிந்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,480 என்றும் சவரனுக்கு ரூ.43,840 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,978 என்றும் சவரனுக்கு ரூ.47,824 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.11 மற்றும் சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.76,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,475 என்றும் சவரனுக்கு ரூ.43,880 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 மற்றும் சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,973 என்றும் சவரனுக்கு ரூ.47,784 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.11 மற்றும் சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.76,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment