Advertisment

கடகடவென சரிந்த தங்கம்... ரூ.1000 வரை வெள்ளி வீழ்ச்சி.. தங்கம் வாங்கலாமா?

வெள்ளி கிராம் ரூ.58ஆகவும் கிலோ பார் வெள்ளி ரூ.58000 ஆகவும் விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
கடகடவென சரிந்த தங்கம்...  ரூ.1000 வரை வெள்ளி வீழ்ச்சி..  தங்கம் வாங்கலாமா?

Gold rates today in Chennai - 07 September 2022

சென்னையில், இன்று (செப்.7) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4695 ஆகவும், சவரனுக்கு ரூ.37560 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 24 காரட் 99.99 சதவீத தூயத் தங்கம் கிராம் 5097 ஆகவும், சவரனுக்கு ரூ.40776 ஆகவும் உள்ளது. ஆக தங்கம் நேற்றைய விலையை காட்டிலும் கிராமுக்கு ரூ.55 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் நேற்று கிராம் ரூ.4750 ஆக காணப்பட்டது.

Advertisment

publive-image

வெள்ளி விலை

செப்.1ஆம் தேதி கிராம் ரூ.58 ஆக சரிந்த வெள்ளி அதன் பின்னர் சீரான இடைவெளியில் உயர்ந்துகொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்றைய விலையை காட்டிலும் இன்று கிராமுக்கு 1 ரூபாய் என, கிலோவுக்கு ரூ.1000 குறைந்துள்ளது.

தற்போது கிலோ வெள்ளி ரூ.58,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு இருந்த விலையை தற்போது எட்டியுள்ளது.

கடந்த மாதம் கிராம் வெள்ளி ரூ.64-ஐ யும் கடந்து விற்பனையானது. அவ்வாறு பார்க்கையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி விலை ரூபாய் 6 ஆயிரம் வரை சரிந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment