Advertisment

Today Gold Rate: தங்கம் விலை கூடுமா? அமெரிக்க நிலவரம் அறிய காத்திருக்கும் முதலீட்டாளர்கள்

Gold rates today in Delhi, Chennai, Kolkata, Mumbai - 13 July 2022 Tamil News: டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. டெல்லியில் 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 150 குறைந்து ரூ. 46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gold rates today, 24 August 2022

இன்று, 24 ஆகஸ்ட் 2022 தங்கம் விலை

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. போர் பதற்றம் காரணமாக சமையல் எரிவாயு, கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் உள்ளிவற்றின் விலையில் கடுமையான ஏற்றமும், மிதமான சரிவுமாக இருந்து வருகிறது. எனவே, பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் மக்கள் பாதுகாப்பான முதலீடாக கருதும் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.

Advertisment

இவற்றுடன், ஜி-7 உச்சி மாநாட்டில் எட்டப்பட்ட ரஷ்ய தங்க இறக்குமதிக்கு தடை முடிவு, தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீது இந்தியா விதித்துள்ள புதிய சுங்க வரி (15 சதவீதம்), அமெரிக்கா, இந்தியாவில் நிலவும் பணவீக்கம், டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி உள்ளிட்டவை தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றத்தை கொண்டு வருகின்றன.

அமெரிக்க நிலவரம் அறிய காத்திருக்கும் முதலீட்டாளர்கள்…

உலகில் வளர்ந்த நாடாக வலம் வரும் அமெரிக்காவில் கால் நூற்றாண்டில் இல்லாத வகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அந்நாட்டின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி அதன் நிதிக் கொள்கையில் திருத்தம் செய்து வருகிறது. இதனால், அங்குள்ள பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து முதலீட்டார்கள் யோசனை செய்து வருகிறார்கள்.

"அமெரிக்க சிபிஐயை (CPI) விட வர்த்தகர்கள் தங்கள் இருக்கைகளின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்", மேலும் நாணயம் மற்றும் தங்க முதலீட்டாளர்கள் ஒருவேளை தேவைக்கு மட்டுமேயான அடிப்படையில் செயல்படுகிறார்கள் என்று எஸ்பிஐ அசெட் மேனேஜ்மென்ட்டின் நிர்வாக பங்குதாரர் ஸ்டீபன் இன்னெஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயல்வதால், இந்த மாத இறுதியில் மத்திய வங்கியால் 75-அடிப்படை-புள்ளி வட்டி விகித உயர்வு இருக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் என்றும், சிறு சிறு இறக்கம் இருக்கும் என்றும் ஸ்டீபன் இன்னெஸ் தெரிவித்துள்ளார்.

டாலரின் மதிப்பு 20-ஆண்டுகளின் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மற்ற நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தை கவர்ச்சியற்றதாக மாற்றியுள்ளது. மேலும், டாலரின் மதிப்பு உயர்வு 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்க கருவூல வருமானத்தை உயர்த்தியுள்ளது.

Gold, silver price today, July 6:  gold price falls by RS.520 per razor

ஃபெடரல் ரிசர்வ் நிதிக் கொள்கைக்கான முன்னெச்சரிக்கை குறிப்புகளுக்கான மாதாந்திர யு.எஸ் பணவீக்கத் தரவைக் கவனமாக முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், தங்கத்தின் விலை ஒன்பது மாதங்களுக்கும் மேலாக இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்து வருகிறது. இன்று தங்கம் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.1% அதிகரித்து 1,727.89 டாலராக இருந்தது. இதுவே கடந்த செப்டம்பரில் ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,722.30 டாலராக இருந்தது.

மற்ற விலைமதிப்பற்ற உலோகங்களில், ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.4% அதிகரித்து 18.97 டாலாரகவும், பிளாட்டினம் 845.51 டாலாரகவும், பல்லேடியம் 0.2% அதிகரித்து 2,031.06 டாலாரகவும் உள்ளது.

இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்:-

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. டெல்லியில் 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 150 குறைந்து ரூ. 46,800 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ. 156 குறைந்து ரூ. 51,054 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை, இந்த மூன்று நகரங்களிலும் ஒரே விலையாக இருக்கிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.100 ரூ. 56,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை நிலவரம்:-

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து, ரூ. 4,670 ஆகவும், சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.37,360 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

publive-image

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து, ரூ. 4,660 ஆகவும், சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.37,280 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.46,600 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 50,840 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை

சென்னையில் நேற்று வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.62.50க்கு விற்பனையாகியது. கிலோ ஒன்றுக்கு ரூ.500 குறைந்து ரூ.62,500க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.61.70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.61,700க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Gold Rate Business Tamil Business Update Gold Gold Selling Gold Investment Gold Bullion Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment