Gold rates today in Chennai Tamil News: உலகில் சக்தி வாய்ந்த நாடாக வலம் வரும் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெப்பு நடத்தி போர்தொடுத்துள்ளது. இந்த போர் பதற்றம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக விலைமதிப்புமிக்க அபரணமான தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இம்மாதம் முதல் தேதியில் தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது.
ஆனால் மறுநாளே தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டது. அதன்படி ஜூன் 2ஆம் தேதி தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை ஆகியது. பிறகு கழிந்த நாட்களிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.
கடந்த 14ம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனையாகியது. மேலும், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனையானது.
மீண்டும் கடந்த 15ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூ.4,715க்கும், சவரன் 37,720 ரூபாய்க்கும் விற்பனையாகியது.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்தும் (4755 ரூபாய்க்கு விற்பனை) சவரனுக்கு ரூ.120 உயர்ந்தும் (ரூ.38,040) விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,765 ஆகவும், சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.38 ஆயிரத்து120க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை:
வெள்ளி கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து, கிராம் ரூ.66.30க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.66,300க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாத நிலையில் மீண்டும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil