Advertisment

NEFT பயனாளர்களுக்கு நற்செய்தி : இனி பணத்தை 24 மணிநேரமும் 365 நாட்களும் அனுப்பலாம்

NEFT transfer available 24x7 : வங்கியில் இருந்து பணத்தை NEFT முறையில் இனி 24 மணிநேரமும், 365 நாட்களும் அனுப்புவதற்கு ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEFT timings,neft limit,neft charges,neft sbi,Neft transfer,neft full form,neft meaning,how to do neft,new neft rules, neft, rtgs, imps

NEFT timings,neft limit,neft charges,neft sbi,Neft transfer,neft full form,neft meaning,how to do neft,new neft rules, வங்கிகள். பணப்பரிமாற்றம், கட்டணம், வங்கி வேலைநேரம். neft, rtgs, imps

வங்கியில் இருந்து பணத்தை NEFT முறையில் இனி 24 மணிநேரமும், 365 நாட்களும் அனுப்புவதற்கு ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய நடைமுறை, டிசம்பர் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

Advertisment

பணத்தை ஆன்லைன் முறையில் பரிமாற்றம் செய்ய வங்கிகளில் NEFT, RTGS மற்றும் IMPS என்ற வழிமுறைகள் உள்ளன. சேமிப்பு கணக்குகளை பொறுத்தவரையில், NEFT முறையில் ரூ.1 லட்சம் வரையிலும், ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பு எனில் RTGS முறையில் பணம் அனுப்பலாம். IMPS முறையில், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பணம் அனுப்பலாம். இந்த முறையில், பணம் உடனடியாக பயனாளருக்கு போய் சேர்ந்துவிடும், ஆனால், இதற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.

NEFT முறையில் பணம் அனுப்ப வேண்டுமென்றால், இதுவரை வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணிவரையிலும் (அதாவது வங்கி வேலை நேரங்களில்), முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆனால், பணப்பரிமாற்றம், காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மட்டுமே நடைபெற்று வந்தது.

இதன்காரணமாக, NEFT முறையில் பணம் அனுப்ப திட்டமிட்டிருந்தவர்கள், நேரம் மற்றும் காலண்டர் இவைகளை அருகில் வைத்துக்கொண்டே திரிய வேண்டிய நிலை இருந்தது.

நிம்மதி : இந்நிலையில், NEFT முறையிலான பணப்பரிமாற்றத்தை இனி 24 மணிநேரமும், 365 நேரங்களும் மேற்கொள்ள ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

வங்கி வேலைநேரங்களில், வங்கிகளின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் இணையதள பணப்பரிமாற்றம், விடுமுறை மற்றும் வங்கிவேலைநேரங்கள் அல்லாத காலங்களில் ‘Straight Through Processing (STP)’ முறையில் இயங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. NEFT முறையில் பணம் பெறுபவர்கள் அது எந்நேரமானாலும், அவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தகவல்களை தெரிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டணம் ஏதும் உண்டா?

NEFT அடிப்படையிலான பணப்பரிமாற்றத்திற்கு சில வங்கிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன. இந்த கட்டணங்கள், 2020 ஜனவரி முதல் அனைத்து வங்கிகளும் வசூலிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reserve Bank Of India Money
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment