Advertisment

வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Government extends FY21 ITR filing deadline for individuals till Sep 30: தனிநபர்கள் இப்போது ஜூலை 31 க்கு பதிலாக 2020-21 நிதியாண்டில் சம்பாதித்த வருமானத்திற்கான வரி அறிக்கையை செப்டம்பர் 30 வரை தாக்கல் செய்யலாம்.

author-image
WebDesk
New Update
வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக 2020-21 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

Advertisment

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு ஆறுதலான விஷயமாகும். இந்த முடிவு தற்போதைய சூழலில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் வணிகங்களின் இணக்க சுமையை குறைக்கும்.

வருமான வரி விதிகளின்படி, மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய நிதியாண்டில் (2020-21) ஐடிஆர் -1 அல்லது ஐடிஆர் 4 ஐ தாக்கல் செய்ய தனிநபர் வரி செலுத்துவோரின் கடைசி தேதி பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆகும்.

இருப்பினும், தனிநபர்கள் இப்போது ஜூலை 31 க்கு பதிலாக 2020-21 நிதியாண்டில் சம்பாதித்த வருமானத்திற்கான வரி அறிக்கையை செப்டம்பர் 30 வரை தாக்கல் செய்யலாம்.

இதேபோல், கணக்குகள் தணிக்கை செய்ய வேண்டிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு, காலக்கெடு வழக்கமாக அக்டோபர் 31 ஆகும். ஆனால் மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) நிறுவனங்களுக்கான வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2021 நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.

இதற்கிடையில், அபராதத்துடன் தாமதமாக வருமான வரி ஐ.டி.ஆரை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவையும் அரசாங்கம் நீட்டித்துள்ளது. வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யத் தவறும் வரி செலுத்துவோருக்கு இந்த முடிவு உதவியாக இருக்கும். ஆனால் செப்டம்பர் 30 காலக்கெடுவுக்குப் பிறகு, தாக்கல் செய்வோர் அபராதத்துடன் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். தாமதமான ஐடிஆர் அல்லது திருத்தப்பட்ட ஐடிஆரை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இப்போது ஜனவரி 31, 2022 ஆகும்.

சிபிடிடியின் சுற்றறிக்கையின்படி, படிவம் 16 ஐ சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 15, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களால் படிவம் 16 ஐ சமர்ப்பிப்பதற்கான முந்தைய கடைசி தேதி ஜூன் 15 ஆகும். இதுவரை வருமான வரி கணக்கு தாக்கலை ஆரம்பிக்காத ஊழியர்களுக்கு படிவம் 16 அவர்களின் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Income Tax Return Filing Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment