Advertisment

Custom Duty Hike : ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களின் விலை உயர்வு!

Govt Hike Custom Duty on Refrigerators, AC, Imported Footwear:

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Custom Duty Hike

Custom Duty Hike

Custom Duty Hike : இறக்குமதி செய்யப்படும் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களின் இறக்குமதி அதிகரிக்கிறது. இதனால்

Advertisment

மத்திய  அரசு, இறக்குமதி செய்யப்பட்ட ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், உட்பட 19 பொருட்கள் மீதான சுங்க வரியை உயர்த்தியுள்ளது.  நடப்பு கணக்குப் பற்றாக்குறை மீதான தாக்கத்தின குறைக்க  நேற்று (26.9.18)  இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது.

Govt Hike Import Duty on 19 Items; AC, Refrigerators, Imported Footwear : இறக்குமதி வரி உயர்வு!

இதனால், இறக்குமதி செய்யப்படும் ஏசி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், ஸ்பீக்கர், காலாணிகள், ரேடியல் கார் டயர், வைரம், விளைய உயர்ந்த ஆடம்பர கற்கள், கழிவறை பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், ரேப்பர்கள், சமையல் அறை பிளாஸ்டிக் பொருட்கள், ஸ்டேஷ்னரி, டிராவல் பேக்ஸ் உள்ளிட்டவையின் விலை 25 சதவீதம் வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூடவே, விமான எரிபொருள் விலையும் 0 முதல் 5 சதவீதம் வரை உயர வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (27.9.18) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி விவரங்கள்:

ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி, பிரிட்ஜ் கம்ப்ரசர்கள் 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும், ஸ்பீக்கர்கள் 10ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன.

இதுபோல், ரேடியல் கார் டயர்கள் 10ல் இருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. வைரங்கள் மீதான வரி 5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இதுபோல், பிளாஸ்டிக்கால் ஆன குளியலறை உபகரணங்கள், பிளாஸ்டிக் பாக்ஸ், பாட்டில், ஹாட் பேக், அலுவலக ஸ்டேஷனரி பொருட்கள், அலங்கார ஷீட், வளையல் சூட்கேஸ் மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஜெட் எரிபொருள் மீது 5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 86,000 கோடி மதிப்பிலான பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.

சீனா ஏற்றுமதி:

அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப்போர் வலுத்து வருகிறது. இதனால் அமெரிக்காவால் தடுக்கப்பட்ட பொருட்களை இந்தியாவுக்கு சீனா அதிகமாக ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் உள்ளன.

இதுபோல், பிற நாடுகளுக்கும் இந்தியா முக்கிய சந்தையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இறக்குமதியை தடுக்கும் வகையில் இந்தியா வரி விதித்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மற்றும் பிளாஸ்டிக், ஸ்டேஷனரி பொருட்கள் உட்பட அனைத்தும் விலை அதிகரிக்கும் எனவும், இந்திய உற்பத்தி ஊக்குவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

19 பொருட்களின் இறக்குமதிக்கான முந்தை வரி மற்றும் உயர்த்தப்பட்ட வரி முழு விபரம்:

1 Air conditioners 10 -  20

2 .Household Refrigerators 10 - 20

3. Washing machines less than 10 Kg 10  - 20

4. Compressor for air conditioners and refrigerators 7.5 -  10

5. Speakers 10 -  15

6 .Footwears 20-  25

7. Radial Car tyres 10 - 15

8. Non industrial diamond (other than rough diamonds), i.e., cut and polished diamond 5 - 7.5

9. Diamonds-semi processed, half cut or broken 5 -  7.5

10. Lab grown diamonds 5  - 7.5

11. Cut and polished Colored gemstone 5  - 7.5

12. Articles of jewellery and parts thereof, of precious metal or of metal clad with precious metal 15  - 20

13. Articles of Goldsmith or silversmith wares and parts thereof of precious metal or of metal clad with precious metal 15 -  20

14 .Bath, shower bath, sink, wash basin, etc. of plastics 10 -  15

15. Articles of plastics for conveyance and packing such as boxes, case, containers, bottles, insulated ware etc. 10 -  15

16.  Tableware, kitchenware and other household items of plastics 10  - 15

17 .Miscellaneous items of plastics such as office stationery, fitting for furniture’s, decorative sheets, statuettes, beads, bangles etc. 10 -  15

18.  Trunks, Suitcase, Executive cases, Brief Cases, travel bags and other bags etc. 10 -  15

19.  Aviation turbine fuel 0 -  5

Arun Jaitley
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment