Advertisment

தங்க இறக்குமதி வரி 15% ஆக உயர்வு; தங்கம் விலை மீண்டும் அதிகரிக்குமா?

India has raised basic import duty on gold to 12.5 per cent from 7.5 per cent, according to a government notice dated June 30 Tamil News: உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sovereign Gold Bond new issue opens today

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு

The central government has hiked the import duty on gold due to the depreciation of the rupee,Gold Prices May Increase By Around Rs 2500: தங்கத்திற்கான இறக்குமதி வரியை 10.75% இல் இருந்து 15% ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக புள்ளி விவரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்கவும், தங்கம் இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisment

இது கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட் திட்டங்களின் தலைகீழ் மாற்றமாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான சுங்க வரியை 12.5% ​​லிருந்து 7.5% ஆக குறைப்பதாக அறிவித்தார். அந்த நேரத்தில் தங்கத்தின் மீதான மொத்த வரி 10.75% ஆக இருந்தது, இதில் செஸ், சமூக நல கூடுதல் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை அடங்கும்.

இப்போது இறக்குமதி வரி 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தங்கத்தின் மீதான மொத்த வரி 15.75 சதவீதமாக இருக்கும். இந்தியா தனது தங்கத் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது. இதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. இது இந்த வார தொடக்கத்தில் வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் இறக்குமதி குறைந்த இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிக பணம் கொடுத்து தங்கத்தை வாங்க வேண்டும் நிபுணர்கள் கூறுகின்றனர். "இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், இறக்குமதி-ஏற்றுமதியில் சமநிலையை பராமரிக்கவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது" என்று IIFL செக்யூரிட்டீஸ் துணைத் தலைவர் அனுஜ் குப்தா "பைனான்சியல் எக்ஸ்பிரஸ்" இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

publive-image

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அரசு ஏன் உயர்த்துகிறது?

உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. தனது தங்கத் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது மற்றும் இது பெரும்பாலும் நகைத் தொழிலால் இயக்கப்படுகிறது. மே மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி கடந்த ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்து 7.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஒரு வருடத்தில் 6.53 பில்லியன் டாலரில் இருந்து 24.29 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் $21.82 பில்லியனுக்கு எதிராக $44.69 பில்லியனாக அதிகரித்தது. அதிகரித்து வரும் வர்த்தக இடைவெளி மற்றும் வெளிநாட்டு நிதிகளின் தொடர்ச்சியான வெளியேற்றம், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி (ஓரு டாலர் = ரூ.79.12) போன்ற பல காரணிகளால் தங்கத்திற்கான இறக்குமதி வரியை 10.75% இல் இருந்து 15% ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

publive-image

"இது உள்நாட்டில் தங்கத்தை விலை உயர்ந்ததாக மாற்றும், மேலும் மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்று டிரேட்புல்ஸ் செக்யூரிட்டிஸின் கமாடிட்டி & கரன்சி ஆய்வாளர் பாவிக் படேல் "பைனான்சியல் எக்ஸ்பிரஸ்" இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

"பெட்ரோலிய வரியிலிருந்து வரும் வருமானத்தை ஈடுகட்டவும், தங்கம் இறக்குமதியை குறைக்கவும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அமெரிக்க டாலர் தேவையை அதிகரித்து இறுதியில் இந்திய ரூபாயை பலவீனப்படுத்துகிறது. இந்தியா கச்சா மற்றும் தங்கத்தை பெருமளவில் இறக்குமதி செய்கிறது, இது வெளிநாட்டு இருப்புக்களை குறைக்கிறது மற்றும் தங்க பத்திரங்கள், ப.ப.வ.நிதிகளில் முதலீடு செய்ய நுகர்வோரை ஊக்குவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

India Gold Rate Business Tamil Business Update Gold Gold Selling Gold Investment Gold Bullion Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment