Advertisment

உங்க நிலத்திற்கான பட்டா சிட்டா ஆவணங்கள்: மொபைலில் டவுன்லோட் செய்வது எப்படி?

How download Patta Chitta copy from Mobile in Tamil: பட்டா, சிட்டா என்றால் என்ன? மொபலை மூலம் அதனை எப்படி சரிபார்ப்பது? விவரங்கள் இதோ…

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உங்க நிலத்திற்கான பட்டா சிட்டா ஆவணங்கள்: மொபைலில் டவுன்லோட் செய்வது எப்படி?

நிலம் அல்லது வீடு வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ, பட்டா, சிட்டா போன்ற வார்த்தைகளை நாம் கேட்டிருப்போம். மேலும், உங்கள் நிலத்தை வைத்து விற்கவோ அல்லது அதைவைத்து கடன் பெறவோ நம்மிடம் முதலில் பட்டா, சிட்டா, FMB போன்ற ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும். இந்த பட்டா, சிட்டா என்றால் என்ன? அதனை எப்படி பெறுவது? வாருங்கள் பார்ப்போம்.

Advertisment

பட்டா என்பது என்ன?

பட்டா என்பது ஒரு அசையா சொத்தின் உரிமையாளர் யார் என்பதற்கு வருவாய்த்துறை வழங்கக்கூடிய ஓர் ஆவணம். இது அந்த குறிப்பிட்ட இடத்தின் உரிமைக்கான சட்டபூர்வமான மற்றும் முக்கியமான ஆவணமாகும், இது வருவாய் பதிவாகவும் கருதப்படுகிறது. நிலத்தின் உரிமையாளரின் பெயரில் அரசாங்கத்தால் பட்டா வழங்கப்படுகிறது. இது “Record of Rights” அதாவது “உரிமை பதிவு” என்றும் குறிப்பிடப்படுகிறது.

பட்டாவில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?

உரிமையாளரின் பெயர்

பட்டாவின் எண்ணிக்கை

புல எண் மற்றும் துணைப்பிரிவு

மாவட்டம், தாலுகா மற்றும் கிராமத்தின் பெயர்

நிலத்தின் பரிமாணங்கள் அல்லது பரப்பளவு

வரி விவரங்கள்

நன்செய் அல்லது புன்செய் நிலமா என்ற விவரம்

சிட்டா என்றால் என்ன? 

சிட்டா என்பது ஒரு அசையாச் சொத்து பற்றிய சட்ட வருவாய் ஆவணமாகும், இது அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி (VAO) மற்றும் தாலுகா அலுவலகத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த ஆவணத்தில் உரிமை, அளவு, பரப்பளவு போன்ற பல முக்கியமான விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். சிட்டாவின் முதன்மை நோக்கம் நிலத்தின் வகை அதாவது நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா எனும் விவரங்களை உள்ளடக்கியது. ‘நன்செய்’ என்ற சொல்லுக்கு கால்வாய்கள், ஆறுகள், குளங்கள் போன்ற நீர் ஆதாரம் கொண்ட குறிப்பிட்ட நிலம் அல்லது அதைச்  சுற்றியுள்ள பகுதி என்று பொருள், ‘புன்செய்’ நிலம் என்பது நீர் ஆதாரம் குறைவாக உள்ள நிலப்பகுதியாகும்.

பட்டா மற்றும் சிட்டா ஆகிய இரண்டும் தமிழக அரசால் வழங்கப்படுகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டில், பட்டா மற்றும் சிட்டாவை தேவையான தகவல்களுடன் ஒரே ஆவணமாக அரசாங்கம் இணைத்தது.

பட்டா சிட்டாவை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?

வருவாய் சேவைகளுக்காக உருவாக்கப்பட்ட தமிழக அரசின் அதிகாரப்பூர்வ https://eservices.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

பட்டா நகலை பார்க்க அல்லது பதிவிறக்கம் செய்ய, ‘நில உரிமை (பட்டா & புலப்படம் / சிட்டா/நகர நில அளவைப் பதிவேடு) விவரங்களை பார்வையிட’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அதில் நீங்கள் மாவட்டம் மற்றும் பகுதி வகையை கிராமம்/நகரம் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும், பின்னர் ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும்.

அடுத்ததாக, மாவட்டம், தாலுகா, நகரம், வார்டு, தொகுதி, புல எண், துணைப்பிரிவு எண் போன்ற தேவையான விவரங்களை உள்ளிடுங்கள், பின்னர் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

தேவையான அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்த பிறகு, நிலத்தின் விவரங்கள் அடங்கிய சான்றிதழ் ஆன்லைனில் கிடைக்கப்பெறும்.

அந்த சான்றிதழில் நிலத்தின் வகை, கட்டுமான வகை, புல எண், இடம், நகராட்சி கதவு எண் போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதில் பட்டா சிட்டா மட்டுமல்லாது FMB எனப்படும் நில அளவை புலப்படத்தையும் பார்வையிட முடியும்.

மேலும் இவற்றை நீங்கள் உங்கள் மொபலைலிலும் எளிதாக மேற்கண்ட நடைமுறைகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment