Advertisment

IRCTC News: ரயில் டிக்கெட்; ஸ்மார்ட்போனில் மின்னல் வேக புக்கிங் இப்படி பண்ணுங்க

முன்பு போல் ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை இல்லை. மின்னல் வேகத்தில் ஸ்மார்ட்போன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்துவிடலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC News: ரயில் டிக்கெட்; ஸ்மார்ட்போனில் மின்னல் வேக புக்கிங் இப்படி பண்ணுங்க

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் முன்னணி துறைகளில் ஒன்று ரயில்வே துறை. அலுவலகம் செல்லும் பெரும்பாலான மக்கள் ரயில்பயணத்தையே தங்களது வசதியாக கருதி பயணித்து வருகின்றனர். அதற்கு ஏற்றாபோல் ரயில்வேத்துறையில், பயணக் கட்டணம் மிகவும் குறைவு மட்டுமல்லாமல், உணவு, கழிப்பறை போன்ற வசதிகள் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

முன்பு போல் ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை இல்லை. மின்னல் வேகத்தில் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்துவிடலாம்.

ஐஆர்சிடிசி செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து ரயில்வே தொடர்பான சேவைகளையும் எளிதாக அணுகலாம்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, உங்களது ஸ்மார்ட்போனில் ஐஆர்சிடிசி செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். முதன்முறையாக ஐஆர்சிடிசி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யப்போகிறீர்கள் என்றால், ரெஜிஸ்டர் செய்வது அவசியமாகும். அதன் பிறகான வழிமுறைகளை கீழே விரிவாக காணலாம்.

Step 1: முதலில் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் irctc.co.in/mobile செல்ல வேண்டும் அல்லது ஐஆர்சிடிசி செயலி டவுன்லோடு செய்ய வேண்டும்.

step 2: லாகினுக்கு தேவையான விவரங்களை பதிவிட வேண்டும் அல்லது புதிதாக ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.

step 3: முகப்பு பக்கத்தில், Train Ticketing section-இல் ‘Plan My Bookings’ கிளிக் செய்ய வேண்டும்.

Step 4: அடுத்ததாக, பயண தேதி, ரயில், போர்டிங் பாயிண்ட் ஆகியவற்றை பதிவிட்டு, Search Train கொடுக்க வேண்டும்.

Step 5: உங்கள் திரையில் ரயில்களின் பட்டியல் தோன்றும். அதில், உங்களின் விருப்பமான ரயிலை தெர்ந்தெடுத்து, பயணிகளின் விவரங்களை சேர்க்க வேண்டும்.

Step 6: அடுத்ததாக, ‘Review Journey Details’ கிளிக் செய்து, பயண விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

Step 7: இறுதியாக, ‘Proceed to Pay’ கொடுக்க வேண்டும். உங்கள் மொபைல் வாலட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, Paytm, UPI அல்லது நெட் பேங்கிங் மூலம் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தலாம்.

உங்களின் டிக்கெட் முன்பதிவு பிராசஸ் முடிவடைந்ததும், பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு பிஎஸ்ஆர் (PNR) ரயில் எண், பெட்டி எண், பயணத் தேதி போன்ற அனைத்து விவரங்களும் குறுஞ்செய்தியாக வரும். உடக்கார்ந்த இடத்திலே ரயில் டிக்கெட் புக்கிங் பிராசஸை எளிதாக முடித்துவிடலாம். இந்த முறையில் நீங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து இனிமையான பயணத்தை தொடங்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment