Advertisment

பான் கார்டில் பெயர், முகவரி மாற்ற வேண்டுமா? 10 நிமிடத்தில் ஆன்லைனில் செய்யலாம்; சிம்பிள் ஸ்டெப்ஸ்

பான் கார்டில், ஆன்லைன் மூலம் எளிதாக பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்வது எப்படி என்பது இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உங்க பான் கார்டை மிஸ் யூஸ் பண்றாங்களா? கண்டறிய எளிய வழி இதோ

How to change your Surname and address in PAN card: முக்கிய ஆவணங்களில் ஒன்றான பான் கார்டில், ஆன்லைன் மூலம் எளிதாக பெயர் மற்றும் முகவரி மாற்றம் எப்படி செய்வது என்பதை இப்போது பார்போம்.

Advertisment

அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு அல்லது நிரந்தர கணக்கு எண் மிகவும் அவசியமான ஆவணமாகும். இது 10 இலக்க எண்ணெழுத்து பான் எண்ணாக வருகிறது. இதைப் பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது.

இது தனிநபர் அல்லது நிறுவனங்களின் வரிப் பொறுப்பை மதிப்பிடுவதில் இன்றியமையாததாக இருக்கும். மேலும், அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளையும் வருமான வரி ஆணையம் கண்காணிப்பதற்கும், வரி ஏய்ப்புக்கான வாய்ப்புகளைக் குறைப்பதற்கும் பான் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாகும்.

மேலும், பான் கார்டு பல சந்தர்ப்பங்களில் அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அதற்காக பயனர்கள் பான் கார்டில் உள்ள கடைசி பெயர் மற்றும் முகவரியை மாற்றலாம், குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு.

அது வங்கியாக இருந்தாலும் அல்லது வேறு எந்த நிதி பரிவர்த்தனையாக இருந்தாலும், உங்கள் பான் எண்ணை வழங்குவது அவசியம். இருப்பினும், குடும்பப்பெயர்களை மாற்றுவது போன்ற சில நேரங்களில் உங்கள் பான் கார்டில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும்.

உங்கள் வீட்டில் இருந்தபடியே பான் கார்டில் குடும்பப்பெயரை மாற்றுவதற்கான படிப்படியான செயல்முறையை இப்போது பார்க்கலாம்.

பான் கார்டில் உங்கள் விவரங்களைப் புதுப்பிக்க அல்லது உங்கள் பான் கார்டில் உங்கள் பெயரைத் திருத்த கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றுங்கள்

முதலில், நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் என அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்

அடுத்ததாக, 'தற்போதைய PAN இல் திருத்தம்' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்

பின்னர் சரியான பிரிவு வகையைத் தேர்ந்தெடுக்கவும்

சரியான பெயர் மற்றும் சரியான ஸ்பெல்லிங் கொண்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

பான் கார்டு வைத்திருப்பவர்கள் முகவரி அல்லது கடைசி பெயரை மாற்றுவதற்கு 110 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

பின்னர், சமர்ப்பி விருப்பத்தை கிளிக் செய்யவும்.

பிரிண்ட் எடுக்கப்பட்ட விண்ணப்பத்தை வருமான வரி பான் சேவைகள் யூனிட்டில் (NSDL e-Governance Infrastructure Limited மூலம் நிர்வகிக்கப்படுகிறது) NSDL முகவரிக்கு அனுப்பவும்.

புதுப்பிக்கப்பட்ட பான் கார்டு விண்ணப்பித்த நாளிலிருந்து 45 நாட்களில் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.

இதேபோல் முகவரியை மாற்ற, தற்போதைய முகவரி கொண்ட ஆவணத்தை பதிவேற்றம் செய்து எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Business Pan Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment