Advertisment

உங்க பான் கார்டை மிஸ் யூஸ் பண்றாங்களா? கண்டறிய எளிய வழி இதோ

பான் கார்டு மூலம் மோசடி நடந்துள்ளதா? அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? கண்டுபிடிக்க எளிய வழிமுறைகள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உங்க பான் கார்டை மிஸ் யூஸ் பண்றாங்களா? கண்டறிய எளிய வழி இதோ

How to check your PAN card used in Tamil: இன்றைக்கு இன்றியமையாத ஆவணங்களில் ஒன்றான பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டுப்பிடிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு அல்லது நிரந்தர கணக்கு எண் மிகவும் அவசியமான ஆவணமாகும். இது 10 இலக்க எண்ணெழுத்து அடங்கிய பான் எண்ணுடன் வருகிறது. அதைப் பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் செய்ய முடியாது.

உங்கள் பெரும்பான்மையான தனிப்பட்ட தரவு அனைத்தும் உங்கள் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் முகவரி, மொபைல் எண், வங்கிக் கணக்கு எண் மற்றும் உங்கள் நிறுவனம் பற்றிய தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே பான் கார்டு தவறான நபரின் கைகளுக்குச் சென்றால், அவர்கள் மேற்கண்ட விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம், இது தொடர்ச்சியான மோசடிகளுக்கு வழிவகுக்கும்.

யாராவது உங்கள் பான் கார்டுக்கான அணுகலைப் பெற்றால், நீங்கள் அடையாளத் திருட்டு அல்லது வங்கி பண இழப்பு மோசடிகளுக்குப் பலியாவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த திருட்டு மற்றும் மோசடிகள் மிகவும் ஆபத்தானவை, ஆனால் அவற்றைத் தவிர்க்க பல வழிகள் உள்ளன.

பான் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் பான் கார்டு விவரங்களை தெரியாத நபர்களிடம் கொடுக்கக்கூடாது.

பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்:

கிரெடிட் ஸ்கோரை உருவாக்குவதன் மூலம் தங்கள் பான் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அட்டைதாரர்கள் சரிபார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: மாதம் ரூ.1000 முதலீடு; இரட்டிப்பு வருமானம்; தபால் அலுவலக சூப்பர் ஸ்கீம் இதுதான்!

CIBIL, Equifax, Experian அல்லது CRIF உயர் மதிப்பெண் மூலம் கடனின் நிலையைக் கண்காணிக்கவும், ஏதேனும் கடன் வழங்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.

உங்கள் கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் (CIBIL) மதிப்பெண்ணை அவ்வப்போது சரிபார்க்கவும். உங்கள் CIBIL போர்ட்டலில் தவறான பதிவு இருந்தால், நீங்கள் மோசடிக்கு ஆளாகியிருக்கலாம், மேலும் விரைவாக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு மோசடி குறித்து தெரிவிக்கவும்.

பான் அட்டைதாரர்கள் நிதி அறிக்கைகளை சரிபார்க்க Paytm அல்லது பேங்க் பஜார் இணையதளங்களுக்குச் செல்லலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Pan Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment