Advertisment

மோசடிகளைத் தடுக்க பாதுகாப்பான ஆதார் அட்டை; டவுன்லோட் செய்வது எப்படி?

ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க சூப்பரான ஐடியா; பாதுகாப்பான ஆதாரை டவுன்லோடு செய்வது எப்படி என்பது இங்கே.

author-image
WebDesk
New Update
ஆதார் கார்டில் இத்தனை வகைகளா? சிறப்பு அம்சங்கள் என்ன?

How to download secured Aadhaar card in Tamil: இன்றைய காலக் கட்டத்தில் ஆதார் இன்றியமையாத ஆவணமாகும். அதேநேரம் ஆதார் மோசடி தொடர்பான அபாயங்களும் அதிகரித்து வருகின்றன. எனவே ஆதாரை பாதுகாப்பாக பயன்படுத்துவது அவசியம். ஆதாரை பாதுகாப்பாக பயன்படுத்த சூப்பரான வழிமுறையை இப்போது பார்ப்போம்.

Advertisment

ஆதார் அட்டை, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட ஐடி ஆகும். இது இந்தியாவின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும், மேலும் பல நோக்கங்களுக்காக அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும் அதிகரித்து வரும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, UIDAI ஆனது மறைக்கப்பட்ட ஆதார் ஐடி அல்லது விர்ச்சுவல் ஐடி (VID) விருப்பத்தை வழங்கியுள்ளது. மறைக்கப்பட்ட ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண்ணாகும், இது உங்கள் தனிப்பட்ட தகவலைப் பற்றிய முக்கியமான எதையும் வெளிப்படுத்தாமல் பகிரப்படலாம்.

ஆதாரின் மறைக்கப்பட்ட பதிப்பு என்பது, 12 இலக்க ஆதார் எண்ணின் முதல் எட்டு இலக்கங்களை மறைத்து, கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும்படி உங்களின் அடையாளத்தைப் பாதுகாக்கிறது. இதன் மூலம் கார்டு தொலைந்து போனாலும் அதை தவறாக பயன்படுத்த முடியாது என்பது உறுதி.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஆன்லைன் மோசடியில் இருந்து தங்கள் தரவுகளைப் பாதுகாக்க, ஆதார் அட்டை விவரங்களைப் பகிரக் கூடாது என்று UIDAI பொதுமக்களை எச்சரித்தது. மக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு நோக்கங்களுக்காக மறைக்கப்பட்ட ஆதாரை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மறைக்கப்பட்ட ஆதார் என்றால் என்ன?

மறைக்கப்பட்ட ஆதார் என்பது, உங்கள் ஆதார் எண்ணின் முதல் 8-இலக்கங்களை மறைந்து, கடைசி 4 இலக்கங்கள் தெரியும். உங்கள் ஆதாரின் இந்தப் பதிப்பைப் பதிவிறக்கும் போது, ​​உங்கள் புகைப்படம், QR குறியீடு, மக்கள்தொகைத் தகவல் மற்றும் பிற விவரங்கள் அப்படியே இருக்கும்.

இது உங்கள் ஆதார் அட்டையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் கூடுதலாக இது ஒரு சட்டப்பூர்வ சரிபார்ப்பு முறையாகும். மறைக்கப்பட்ட ஆதார் அட்டை UIDAI ஆல் அங்கீகரிக்கப்படும், எனவே, அது சட்டப்பூர்வமானது மற்றும் உங்கள் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இதையும் படியுங்கள்: ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; 70% வரை தள்ளுபடி; எந்த வங்கி தெரியுமா?

அடையாளச் சான்றாக மட்டுமே ஆதாரை வழங்க வேண்டிய இடத்தில் இந்தப் பதிப்பைப் பயன்படுத்தலாம். பிரத்யேக ஐடியின் கடைசி 4 இலக்கங்களுடன் உங்கள் புகைப்படத்தைச் சரிபார்க்க மறைக்கப்பட்ட ஆதாரை வழங்கலாம்.

மறைக்கப்பட்ட ஆதாரை பதிவிறக்கம் செய்வது எப்படி?

1. முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் - https://uidai.gov.in/.

2. முகப்புப் பக்கத்தில், 'ஆதாரைப் பதிவிறக்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.

3. உங்களின் 12 இலக்க எண்ணை உள்ளிட்டு, 'எனக்கு மறைக்கப்பட்ட ஆதார் வேண்டும்' என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைக் கிளிக் செய்யவும்.

4. கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, 'ஓடிபி அனுப்பு' என்பதைக் கிளிக் செய்யவும்

5. ஆவணத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்

6. OTP ஐ உள்ளிட்டு 'ஆதாரைப் பதிவிறக்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.

இதற்குப் பிறகு நீங்கள் மறைக்கப்பட்ட ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், இது PDF வடிவத்தில் இருக்கும் மற்றும் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படும், இது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டு மின்னஞ்சலிலும் கிடைக்கும். ஆதார் அட்டையின் கடவுச்சொல் என்பது உங்கள் முதல் பெயரின் முதல் நான்கு எழுத்துக்களின் ஆங்கில பெரிய (கேப்பிடல்) எழுத்துக்களாகும், அதைத் தொடர்ந்து நீங்கள் பிறந்த ஆண்டு YYYY வடிவத்தில் இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment