Advertisment

மாத சம்பளம் வாங்குபவர்கள் அனைவரும் Income tax கட்ட வேண்டுமா? உங்கள் கேள்விக்கான பதில் இதோ.

நீங்கள் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
itr filing

itr filing

income tax எந்த பக்கம் திரும்பினாலும் இதுக் குறித்த பேச்சு தான். டிவி, ரேடியோ எதை ஆன் பண்ணாலும் சரி மறக்காமல் வருமான வரி கட்டி விடுங்க, தேதி நெருங்கி விட்டது, வருமான வரி கட்டுவது உங்களின் ஜனநாயக கடமை, வரி ஏய்ப்பு செய்வது குற்றம். உறுதியானால் தண்டனை கடுமையாக இருக்கும் என்றெல்லாம் தொடர்ந்து விழிப்புணர்வு விளம்பரங்களும் இடம் பெறுகின்றன.

Advertisment

சரி உண்மையில் யார் யார் வருமான வரி கட்ட வேண்டும்? எப்படி கட்ட வேண்டும்? மாத சம்பளம் வாங்கும் அனைவரும் வருமான வரி கட்டாயம் கட்ட வேண்டுமா? என்ற உங்களின் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் செய்தி தான் இது. படித்து பயன் பெறுங்கள்.

யாரெல்லாம் வருமான வரி கட்ட வேண்டும்?

நிதியாண்டு முடிந்த பின், நம் மொத்த வருமானத்தை கணக்கிட வேண்டும். மாத சம்பளம் போக, வங்கிக் கணக்கில் வரும் வட்டி, வீட்டை வாடகைக்கு விட்டதால் கிடைத்த வருமானம் என்று

வருமானங்களைக் கணக்கிட்டு, அதற்காக வரியை நிர்ணயிக்க வேண்டும்.

சில வருமானங்களுக்கு வரி விலக்கு உண்டு. உதாரணமாக, கம்பெனி பங்குகளில் வரும் ஈவுத்தொகைக்கு(டிவிடெண்ட்) பத்து லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது. நீங்கள் வீடு கட்ட கடன் வாங்கியிருந்தால், அதற்காக நீங்கள் கட்டும் வட்டியையும், அசலையும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, உங்கள் வருமானத்திலிருந்து கழித்து கொள்ளலாம்.

சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஆயுள் காப்பீட்டு பிரிமியம், மருத்துவச் செலவு காப்பீட்டிற்கான செலவு, உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவு போன்றவற்றை உங்கள் வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். கழிவுகளுக்கு பிறகு இருக்கும் தொகை, உங்கள் நிகர வருமானம்.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக் களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது.

80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டும் போது.

கூடுதலாக வருமான வரி பிடிக்கப்பட்டு ரீஃபண்ட் பெற வேண்டியிருந்தால்.

பங்குகள், மியூச்சுவல் யூனி ட்கள், சொத்து விற்றது மூலம் மூலதன ஆதாயம் கிடைத்திருந்தால். நீங்கள் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும்.

மொத்த தகவலும் ஆதாரில் தவறாக இருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

வருமான வரி விவரத்தை (ரிட்டர்ன்ஸ்) ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட வேண்டும், அதற்கு incometaxindiaefiling.gov.in என்கிற இணையதளத்தில் சென்று பதிவு செய்திட வேண்டும.உங்கள் பதிவை உறுதி செய்ய ஒரு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஓடிபி) உங்கள் மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும். வருமான் வரி ஆவணங்களை ஆன்லைனில் நேரடியாகவோ அல்லது XML ஃபைலாகவோ பதிவேற்றுவதன் மூலமும் தாக்கல் செய்யலாம்.

ஒருமுறை ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அது உறுதி செய்யப்பட வேண்டும்.. அதற்கு நெட் பேங்கிங் அல்லது ஆதார் ஓடிபி மூலம் electronic verification code எண்ணை பெற்று உறுதி செய்யலாம். அல்லது, ரிட்டர்ன் ஃபைல் செய்ததன் நகலை பெங்களூருவில் உள்ள மத்திய செயலாக்க மையத்திற்கு அனுப்பியும் உறுதி செய்யலாம்

இதற்கு முன் வருமான வரி கணக்கை யார் மூலமாவது தாக்கல் செய்திருக்கிறீர்கள் என்றால், நேராக LOGIN செய்யலாம். அதில் USERNAME, passwordஐ பதிவு செய்யவும்.. USERNAME உங்கள் பான் எண், PASSWORD தெரியவில்லை என்றால், FORGET PASSWORD கொடுத்து, OTP மூலம் புதிய PASSWORDஐ செட் செய்து கொள்ளலாம்.

Income Tax Income Tax Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment