Advertisment

பாதுகாப்பான பிளாஸ்டிக் ஆதார் கார்டை ஆன்லைனில் பெறுவது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்

பாதுகாப்பான பிளாஸ்டி ஆதார் கார்டை ஆணையம் நேரடியாக வழங்குகிறது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது இங்கே.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aadhaar update| Update Mobile number on aadhar

How to get PVC aadhaar card from UIDAI via online simple steps: பிளாஸ்டிக் ஆதார் கார்டு தேவைப்படுபவர்கள் இனி ஆதார் ஆணையத்திலிருந்து நேரடியாக பெறலாம். இதற்கு ஆன்லைனில் சிறிய விண்ணப்பம் செய்வது மட்டும் போதும். ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இங்கே பார்ப்போம்.

Advertisment

ஆதார் கார்டு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இருப்பினும் ஆதார் கார்டை எடுத்துச் செல்வதில் சிக்கல் இருந்தது. இதனை தவிர்க்கும் பொருட்டு பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தனியார் ஏஜென்சிகள் மூலம் நாம் பெற்றுக் கொள்ளலாம்.

இருப்பினும் தகவல்களின் பாதுகாப்புக் காரணங்களால் கார்டுதாரர்கள் தங்கள் பிளாஸ்டிக் ஆதார் நகலை வெளிச் சந்தையில் வாங்குவதைத் தடுக்கும் வகையில், இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் பாதுகாப்பான பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை ஆணையம் மூலம் கார்டு வைத்திருப்பவர்களின் முகவரிக்கு நேரடியாக அனுப்பப்படும்.

நீங்கள் ஏன் UIDAI இலிருந்து பிளாஸ்டிக் ஆதார் கார்டைப் பெற வேண்டும்?

எழுத்து வடிவில் உள்ள ஆதார் அட்டை, mAadhaar மற்றும் eAadhaar தவிர, UIDAI ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய வடிவம் பிளாஸ்டிக் ஆதார் கார்டு ஆகும். இருப்பினும், திறந்த சந்தையில் இருந்து பிளாஸ்டிக் ஆதார் நகல்களை வாங்குவது UIDAI-ஆல் வாங்கப்பட்ட அட்டைக்கு உத்தரவாதம் அளிக்கும் அதே பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்காது. அதேநேரம் ஆணையத்தில் வழங்கப்படும் அட்டையானது, பல பாதுகாப்பு அம்சங்களுடன் முழுமையான தனிநபர் விவரங்கள் மற்றும் புகைப்படத்துடன் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பாதுகாப்பான QR குறியீட்டைக் கொண்டுள்ளது.

மேலும், UIDAI வழங்கும் பிளாஸ்டிக் ஆதார் கார்டு நல்ல தரமான பிரிண்டிங், லேமினேஷன் மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் (வாட்டர் புரூஃப்) கொண்டது.

பிளாஸ்டிக் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

UIDAI இலிருந்து பிளாஸ்டிக் ஆதார் கார்டை ஆர்டர் செய்ய, கீழ்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:

முதலில் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களான www.uidai.gov.in அல்லது www.resident.uidai.gov.in க்குச் செல்லவும்

அதில் ‘ஆதார் அட்டையை ஆர்டர் செய்’ சேவைக்குச் செல்லவும்

12-இலக்க உங்கள் ஆதார் அட்டை (UID) எண் / 16-இலக்க மெய்நிகர் அடையாள (VID) எண்/ 28-இலக்க ஆதார் பதிவு எண்ணை உள்ளிடவும்.

இப்போது, உங்கள் பாதுகாப்பு சரிபார்ப்பைச் செய்யுங்கள்

பின்னர், 'TOTP' விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் நேர அடிப்படையிலான ஒரு முறை கடவுச்சொல்லை கிளிக் செய்யவும், இல்லையெனில் 'OTP' விருப்பத்துடன் ஒரு முறை கடவுச்சொல்லைக் கிளிக் செய்யவும்

இப்போது, ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை’ ஏற்று, TOTP அல்லது OTP ஐச் சமர்ப்பிக்கவும்

உங்கள் ஆதார் அட்டை விவரங்களை மதிப்பாய்வு செய்து, அச்சிடுவதற்கான ஆர்டர் செய்யப்படுவதற்கு முன் உறுதிப்படுத்தவும்

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ அல்லது நெட் பேங்கிங் மூலம் ரூ.50 (ஜிஎஸ்டி மற்றும் அஞ்சல் கட்டணங்கள் உட்பட) செலுத்துங்கள்.

திரையில் டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய ரசீது மற்றும் SMS இல் சேவை கோரிக்கை எண்ணைப் பெறவும்.

ரசீதை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பிளாஸ்டிக் ஆதார் கார்டு உங்கள் முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment