Advertisment

பிரச்சனையில்லாத பாகப்பிரிவினை; உயில்கள் எழுதுவது எப்படி?

பல ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்த பல சொத்துகளையும் மக்கள் மறந்துவிடுவது இயல்பு. எனவே சிறிய அளவிலான முதலீட்டையும் முறையாக நினைவில் கொண்டு உயில் எழுதுவது மிகவும் அவசியமாகிறது.

author-image
WebDesk
New Update
Death, will, will after death, executors

How to write a foolproof will : ஒருவரின் இறப்பிற்கு பிறகு அவருடைய உடமைகள் மற்றும் இதர அசையும் அசையா சொத்துகள் யாருக்கு சொந்தமாகும் என்பதை தீர்மானிக்க உதவுவது உயில்கள் ஆகும். தன்னுடைய மரணத்திற்கு முன்பே யாருக்கு எந்த சொத்துகள் போய் சேர வேண்டும் என்பதை உடமையாளரே முடிவு செய்கிறார். கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் மரணங்கள் பல்வேறு குழப்பங்களை குடும்ப அளவுகளிலும் நிர்வாக ரீதியாகவும் ஏற்படுத்தியிருப்பது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை.

Advertisment

வாரிசுகள் தேர்வில் கவனம் தேவை

உங்களின் மரணத்திற்கு பிறகு உங்களின் சொத்துகள் உங்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தோர் அல்லது நீங்கள் விரும்பும் நபர்களுக்கு மனம் உவந்து எழுதிக் கொடுக்கலாம். நீங்கள் தொண்டு நிறுவனத்திற்கு உங்களின் சொத்துகளை மாற்ற வேண்டும் என்றால் அந்நிறுவனத்தின் சரியான பெயர் மற்றும் முகவரி உங்களின் உயிலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

பிறகு உங்களின் சொத்துகளை வகைப்படுத்துவது முக்கியமானதாகும். கையில் இருக்கும் நிதி, அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் ஆகியவற்றை பட்டியல் இட வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்த பல சொத்துகளையும் மக்கள் மறந்துவிடுவது இயல்பு. எனவே சிறிய அளவிலான முதலீட்டையும் முறையாக நினைவில் கொண்டு உயில் எழுதுவது மிகவும் அவசியமாகிறது.

பாகப்பிரிவினை

மிகவும் எளிமையான நடையில் உங்களின் உயில் இருத்தல் அவசியமாகிறது. ஒரு வாக்கியத்தை இரட்டை அர்த்தத்தில் புரிந்து கொள்வதற்கு இடம் அளிக்காத வகையில் எழுத வேண்டும். முதலில் உங்களின் பங்குகள், இதர நிறுவனங்களில் இருக்கும் முதலீடுகள், சொத்துகள் ஆகியவற்றை பட்டியலிட்ட பிறகு அதனை பிரித்து எழுதுங்கள். உதாரணத்திற்கு : மியூச்சுவல் ஃபண்டுகள் அனைத்தும் தன்னுடைய மகளுக்கும், நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் தன்னுடைய மகனுக்கும் என்று பிரித்து எழுத அது அவசியமாகும்.

வீடு, நிலம் போன்ற சொத்துகளை எழுதும் போது, இடம் இருக்கின்ற இடம், அளவு, மற்றும் முகவரி போன்ற அனைத்தையும் முதலில் பட்டியலிட்டு பிறகு யாருக்கு எந்த சொத்து வழங்கப்படுகிறது என்பதை எழுதுங்கள்.

கையிருப்பை பிரித்து வழங்குதல்

உங்களின் கையில் இருக்கும் பணத்தை, வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை வாரிசு என்று நீங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு நிதி நிறுவனங்கள் வழங்கிவிடும். கூட்டு கணக்காக கணக்கு துவங்கப்பட்டிருந்தால் அந்த பணம் முழுவதும் உங்களின் ஜாய்ண்ட் அக்கௌண்ட் ஹோல்டருக்கு வழங்கப்பட்டு விடும்.

எக்ஸ்க்யூட்டராக யாரை நியமனம் செய்வது?

ஒவ்வொரு உயிலும் ஒரு எக்ஸ்க்யூட்டரை கொண்டிருக்கும். அவர் உயிலின் அனைத்து கூற்றுகளின் படி நியாயமான முறையில் சொத்துகள் இறந்தவரின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பார். உயிலால் பயன் அடையும் நபரை இந்த பணிக்கு அமர்த்தக் கூடாது என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள். கூடுமான வரையில் இந்த பணிகளுக்கு வழக்கறிஞர்களை நியமிப்பது தான் சரியானதாக இருக்கும்.

உயில் பத்திரத்தை பதிவு செய்வது அவசியமா?

ஒரு முறை எழுதி வைப்பதோடு முடிகின்ற நிகழ்வல்ல இது. ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை உயிலில் மாற்றங்கள் தேவைப்படும் பட்சத்தில் நீங்கள் மாற்றி எழுதலாம். உயிலை பதிவு செய்வது அவசியம் இல்லை. ஆனால் வெளி மாநிலங்களில் நீங்கள் ஒரு சொத்து வைத்திருந்தால், பதிவு செய்யப்பட்ட உயில் எக்ஸ்க்யூட்டரின் பணிச்சுமையை குறைக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment