Advertisment

மார்டன் சிலிண்டரை அறிமுகப்படுத்தும் ஹெச்.பி நிறுவனம்!

இந்த மார்டன் சிலிண்டரை பயன்படுத்த நினைப்பவர்கள் ரூ.1000 செலுத்தி, தங்களது பழைய ஸ்டீல் சிலிண்டர்களை மாற்றிக் கொள்ளலாம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
HPCL to launch modern fiber cylinders soon

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், புதிய எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

Advertisment

ஃபைபர் கலந்து தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த சிலிண்டர்களை கையாள்வது மற்ற சிலிண்டர்களை விட சுலபம். அதோடு நிறைய பாதுகாப்பு அம்சங்களோடும் இந்த சிலிண்டர்கள் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

சரி இதற்கு வாடிக்கையாளர்கள் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

காம்போஸிட் எல்.பி.ஜி சிலிண்டர் 2, 5 மற்றும் 10 கிலோ எடையில் கிடைக்கிறது. மெட்டல் சமையல் எரிவாயுவை, 14.2 கிலோவில் பெற்றுக் கொள்ளலாம்.

இருப்பினும் இந்த வகை சிலிண்டர்கள், ஏற்கனவே சந்தையில் கிடைக்கக் கூடிய மற்ற சிலிண்டர்களைக் காட்டிலும் சற்று விலை அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த மார்டன் சிலிண்டரை பயன்படுத்த நினைப்பவர்கள் ரூ.1000 செலுத்தி, தங்களது பழைய ஸ்டீல் சிலிண்டர்களை மாற்றிக் கொள்ளலாம்.

”இந்த லைட் வெயிட் காம்போஸிட் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களின் சமையல் தேவையை பூர்த்தி செய்கிறது. அதோடு கையாளும் திறனும் ரெகுலர் சிலிண்டரை விட குறைவு தான்” என ஹெச்.பி நிறுவனம் முன்னதாக ட்வீட்டியிருந்தது.

அரிப்பை தடுத்து, யூ.வி பாதுகாப்போடு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மார்டன் சிலிண்டரில் எரிவாயு இருப்பதை இல்லத்தரசிகள் அறிந்துக் கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Gas Cylinder
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment