Advertisment

ஐ.சி.ஐ.சி.ஐ வாடிக்கையாளர்களா நீங்கள்? இனி ஏ.டி.எம் கார்டே இல்லைன்னாலும் பணம் எடுக்க முடியும்!

உங்களின் மொபைல் எண், 4 இலக்க டெம்ப்ரரி கோட், மற்றும் 6 இலக்க டிஜிட்டல் கோட் ஆகியவற்றை உள்ளீடாக கொடுத்தால் பணத்தினை எடுத்துக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ICICI Bank Cardless Cash Withdrawal Process

ICICI Bank Cardless Cash Withdrawal Process

ICICI Bank Cardless Cash Withdrawal Process  : ஒரு வேளை உங்கள் வீட்டில் இருந்து வெளியேறும் போது உங்களின் ஏ.டி.எம் கார்டுகளை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தால் இனி கவலை இல்லை. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உங்களுக்காகவே ஒரு சூப்பரான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கூடவே ஒரு செயலியையும் அறிமுகம் செய்துள்ளது. எனவே நீங்கள் முதலில் அந்த செயலியை உங்களின் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிறகு, எந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிலும் உங்களால் 15 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ள இயலும். ஐமொபைல் (iMobile) என்ற செயலியை முதலில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் காலங்களில் அதில் லாக்-இன் செய்து கார்ட்லெஸ் காஷ் வித்ட்ராவல் (Cardless Cash withdrawal) என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும். பிறகு உங்களுக்கு தற்காலிகமாக அனுப்பப்படும் 4 இலக்க எண்ணை எ.டி.எம். மையத்தில் உள்ளீடாக கொடுத்து உங்களுக்கு தேவையான பணத்தினை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisment

முதலில் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவலுக்கு எப்படி ரெக்வஸ்ட் தருவது என்பதை தெரிந்து கொள்வோம்!

ஐமொபைல் ஆப்பில் சர்வீஸ் என்ற பகுதிக்கு செல்லுங்கள். அங்கு இருக்கும் Cardless Cash Withdrawal என்ற ஆப்சனில் செல்ஃப் ஆசனை க்ளிக் செய்யவும்.

விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..

எவ்வளவு பணம் வேண்டுமோ அதனை உள்ளீடாக கொடுங்கள். தற்காலிக பின்னை தரவும். பின்னர் எந்த கணக்கில் இருந்து பணம் பெற போகின்றீர்களோ அதனை தேர்வு செய்யவும்.

சப்மிட் பட்டனை க்ளிக் செய்வதற்கு முன்பு அனைத்து தகவல்களும் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பிறகு ட்ரான்ஸாக்சன் முடிவுற்றுதாக உங்களுக்கு கன்ஃபர்மேசன் மெசேஜ் வரும்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் எஸ்.எம்.எஸ்

இந்த ட்ரான்சக்ஸன் முடிவுற்றவுடன் 6 இலக்க டிஜிட்டல் கோடுடன் கூடிய மெசேஜை உங்களின் மொபைல் போனுக்கு அனுப்பும் வங்கி.

ஏ.டி.எம்.மில் செய்ய வேண்டியது என்ன?

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு செல்லவும். அங்கு நீங்கள் உங்களின் மொபைல் எண், 4 இலக்க டெம்ப்ரரி கோட், மற்றும் 6 இலக்க டிஜிட்டல் கோட் ஆகியவற்றை உள்ளீடாக கொடுத்தால் உங்களுக்கு நீங்கள் கேட்ட பணம் கிடைத்துவிடும்.

மேலும் படிக்க : பி.பி.எஃப். முதலீட்டாளர்களுக்கு இந்த சங்கதி தெரியுமா? 5 வருசம் வருமான வரியே இல்ல!

Icici Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment