Advertisment

அக்கவுண்டு இல்லாவிட்டாலும் ரூ25 லட்சம் உடனடி பணம்: சிறு தொழிலுக்கு பூஸ்ட் கொடுக்கும் முக்கிய வங்கி!

ICICI bank joins with Amazon offers upto 25 lakhs over draft facility to MSME: ஐசிஐசிஐ வங்கியின் ரூ. 25 லட்சம் வரையிலான உடனடி ஓவர் டிராஃப்ட் வசதி; விவரங்கள் இதோ...

author-image
WebDesk
New Update
ஜனவரி 1 முதல் சேவை கட்டணங்கள் உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ICICI

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ, அமேசானுடன் தொடர்புடைய பல்வேறு விற்பனையாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு லாபகரமான ஒப்பந்தத்தை வழங்க அமேசான் இந்தியா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

Advertisment

இ-காமர்ஸ் தளத்தில் சிறுகுறு வணிக நிறுவனங்களுக்கு (மைக்ரோ, ஸ்மால் மற்றும் மீடியம் எண்டர்பிரைசஸுக்கு) ரூ .25 லட்சம் வரை அதிவேக மற்றும் முற்றிலும் டிஜிட்டல் ஓவர் டிராஃப்ட் (OD) வசதியை ஐசிஐசிஐ வங்கி வழங்குகிறது. இந்த சலுகை வங்கியால் 'InstaOD' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் அல்லாத வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்களும் இந்த ஓவர் டிராஃப்ட் வசதியையும் பெறலாம்.

செய்திக்குறிப்பின் படி, மேம்பட்ட தரவு பகுப்பாய்வு தொழில்நுட்பத்தின் உதவியுடன் வணிகத்தின் கடன் தகுதியைப் பற்றிய தகவலைக் கொண்ட மதிப்பெண் அட்டையின் அடிப்படையில் ஐசிஐசிஐ வங்கி ரூ. 25 லட்சம் வரை உடனடி ஓவர் டிராஃப்ட் தொகையை வணிகங்களுக்கு வழங்கும்.

விற்பனையாளரின் நிதி விவரம் மற்றும் அமேசானில் அவர்களின் பரிவர்த்தனை வரலாற்றின் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் தீர்மானிக்கப்படும். ஓவர் டிராஃப்ட் வசதிக்காக விற்பனையாளரின் தகுதியைத் தீர்மானிப்பதற்கான இந்த கிரெடிட் ஸ்கோர் முறை தொழில்துறையில் முதன்மையானது. மேலும், விற்பனையாளர்கள் மற்றும் வணிகங்கள் அவர்கள் பயன்படுத்தும் OD தொகைக்கு வட்டி செலுத்த வேண்டும், முழுத் தொகையையும் அல்ல.

தொற்றுநோய் பொருளாதாரத்திற்கு பெரும் அடியை ஏற்படுத்தியது, மேலும் MSME கள் மிகவும் சேதத்தை சந்தித்தன. அவர்களின் வணிகத்திற்கு ஊக்கமளிப்பதற்கும், வேகத்தை அதிகரிக்க உதவுவதற்கும், ICICI வங்கி முற்றிலும் டிஜிட்டல் உதவியுடன் வந்துள்ளது. இந்த சலுகை வங்கிகளுக்கு கடன் தகுதியை நிரூபிக்க தேவையான வங்கி அறிக்கைகளுடன் செயல்படுத்தப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கியின் இந்த புதிய சலுகை, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வணிகங்கள் சுமூகமாகத் தொடங்க அனுமதிக்கிறது. மேலும் விற்பனையாளர்கள் ரூ .25 லட்சம் மதிப்புள்ள மூலதனத்தை பரிவர்த்தனைகளின் போது ஆவணங்கள் இல்லாமல் பெற அனுமதிக்கும்.

அமேசானின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்' விற்பனை நெருங்கி வரும் நிலையில், 'InstaOD' சலுகை வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Amazon Icici Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment