Advertisment

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு... ஐசிஐசிஐ வங்கியின் அவசர அறிவிப்பு!

ICICI Bank Tamil News: வங்கிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வருகிறது. இதனால் ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
icici netbanking

ICICI Bank Latest Tamil News, ICICI Bank ATM Rules, ICICI Bank Rules Corona Outbreak, கொரோனா பாதிப்பு ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு

ICICI Bank News: ஒட்டு மொத்த உலகையும் வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் அச்சுறுத்தி வைத்திருக்கும் கொரோனா எதிரொலியால் ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் பெருகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவும் பிற்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை உட்பட பிற சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான சேவை வங்கி சேவை.

கொரோனா எதிரோலியால் வங்கி பணிநேரமும் குறைக்கப்பட்டுள்ளது. சில வங்கிகள் வாடிக்கையாளர்கள் நேரில் வருவதை தவிர்க்குமாறு வேண்டுக்கோள் விடுத்துள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அடுத்த சில நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அச்சத்தில் கூட்டம் கூட்டமாக வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லை வங்கி பணவர்த்தனை, சேமிப்பு கணக்கில் பணத்தை டெபாசிட் செய்துக் கொள்ளுதல், பெரிய தொகையை கை செலவுக்காக எடுத்துக் கொள்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால், வங்கிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வருகிறது. இதனால் ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் அதிகளவு வங்கிகளுக்கு வராமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லை நாடு முழுவதும் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்களில் மக்கள் தேவைக்காக அதிகளவில் பணம் நிரப்பட்டு வருவதாகவும் வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Icici Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment