Advertisment

4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 கட்டணம்; ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் புதிய விதிமுறைகள்

ஐசிஐசிஐ வங்கியில் மாதம் 4 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ICICI Insta Save Account Features, benefits ICICI bank news

ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பணப் பரிவர்த்தனைகள், ஏடிஎம்மில் பணம் எடுத்தல், செக்புக் கட்டணங்கள் போன்றவற்றில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ரெகுலர் சேமிப்பு/சம்பள கணக்கு

பண பரிவர்த்தனை கட்டணங்கள்

மாதம் 4 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

வங்கிக் கணக்கு திறக்கப்பட்ட கிளையில் (Home Branch) மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்கும்போது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 5 ரூபாய் வசூலிக்கப்படும்.

வங்கிக் கணக்கு திறக்காத மற்ற கிளைகளில் (Non Home Branch) தினம் 25,000 ரூபாய் வரை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுக்கும்போது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 5 ரூபாய் வசூலிக்கப்படும்.

மூன்றாம் நபர் பணப் பரிவர்த்தனைகளை பொறுத்தவரை, தினம் 25,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் வசூலிக்கப்படும். அதற்கு மேல் பணம் எடுக்க அனுமதிக்கப்படாது.

சீனியர் சிட்டிசன்கள், யங் ஸ்டார், ஸ்மார்ட் ஸ்டார் கணக்குகளுக்கு தினம் 25,000 ரூபாய் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.

சில்வர் சேவிங்ஸ்/சம்பள கணக்கிற்கும் இதே கட்டண முறைதான்.

கோல்டு பிரிவிலிஜ் சேவிங்ஸ்/ சம்பள கணக்கிற்கு

மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

வங்கிக் கணக்கு திறக்கப்பட்ட கிளையில் (Home Branch) மற்றும் மற்ற கிளைகளில்(Non Home Branch) மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்கும்போது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 5 ரூபாய் வசூலிக்கப்படும். மூன்றாம் நபர் பரிவர்தனைக்கும் இது பொருந்தும்.

ஏடிஎம் பரிமாற்றம் (ஐசிஐசிஐ அல்லாத வங்கி ஏடிஎம்களில் பரிவர்த்தனைகள்) கட்டணங்கள்: வெள்ளி, தங்கம், மேக்னம், டைட்டானியம் மற்றும் wealth வகைகள்

ஒரு மாதத்தில் 6 மெட்ரோ இடங்களில் (மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்) முதல் 3 பரிவர்த்தனைகள் (நிதி மற்றும் நிதி அல்லாதவை) இலவசம்.

ஒரு மாதத்தில் மற்ற எல்லா இடங்களிலும் முதல் 5 பரிவர்த்தனைகள் (நிதி மற்றும் நிதி அல்லாதவை உட்பட) இலவசம்.

அதன்பிறகு, நிதி பரிவர்த்தனைக்கு ரூ.20 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ .8.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.

செக் லீப் வரம்பில் திருத்தம்

ஒரு வருடத்திற்கு 25 செக் லீப்களுக்கு கட்டணங்கள் இல்லை. அதற்கு மேல் ஒவ்வொரு 10 செக் லீப்களுக்கும் ரூ.20 கட்டணம்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையில் உள்ள விகிதங்களில், மேல் பட்டியலிடப்பட்ட கட்டணங்களுக்கு பொருந்தும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Icici Bank Atm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment