ICICI Insta Save Account: ஆன்லைன் மூலமாக ஒரு வங்கி கணக்கை திறக்க நினைக்கு வாடிக்கையாளர்களுக்காக ஐசிஐசிஐ வங்கி, ஆதாரை (Aadhaar) அடிப்படையாக கொண்ட உடனடி டிஜிட்டல் சேமிப்பு கணக்கான ’ICICI Insta Save account’ அறிமுகப்படுத்தியுள்ளது. Insta Savings Account கணக்கு திறக்க தகுதி பெற ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாக அஞ்சல் அலுவலக RD கணக்கில் பணம் டெபாசிட் செய்வது எப்படி?
இந்த வங்கி கணக்கில் Insta Save Account மற்றும் Insta Save FD Account என இரு வகைகள் உள்ளன. Insta Save account என்பது ஒரு உடனடி சேமிப்பு கணக்கு, இதற்கு மாதாந்திர சராசரி இருப்பாக (monthly average balance-MAB) ரூபாய் 10,000/- தேவைப்படுகிறது. மறுபுறம் Insta Save FD account என்பது, FD யுடன் உள்ள உடனடி சேமிப்பு கணக்கு. மேலும் இந்த வங்கி கணக்கில் கணக்கு வைத்திருப்பவர் எந்தவித குறைந்தபட்ச இருப்பும் (minimum balance) வைக்க தேவையில்லை. ஆனால் ரூபாய் 10,000/- க்கு ஒரு வருடத்துக்கான நிரந்தர வைப்புத் தொகையை (FD) முதலீடு செய்ய வேண்டும்.
குறைந்தபட்ச இருப்பு தேவையில்லாத இந்த FD சேமிப்பு வகை கணக்கு (savings account) வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக ஒரு கடன் அட்டை வழங்கப்படும். இந்த வகை Insta Save Account என்பதை ஒரு நபர் மட்டும் தான் திறக்க முடியும், இணைந்து (jointly) இந்த வகை கணக்கை திறக்க முடியாது.
Insta Save கணக்கை கணக்கு வைத்திருப்பவர் ஆன்லைன் (இணையதளம் அல்லது iMobile) மூலமாக அவரே திறக்கலாம். அதன்பிறகு உங்கள் வாடிக்கையாளரை அறிந்துக் கொள்ளுங்கள் (KYC) ஒழுங்குப்படுத்துதல் வழிமுறைகளை வங்கி கிளை அல்லது /SO/PB/VB மூலமாக செய்யப்படும். கணக்கு திறப்பதை வெற்றிகரமாக முடித்த உடன், கடைசி பக்கத்தில் கணக்குதாரருடைய வங்கி கணக்கு எண் மற்றும் இதர வங்கி கணக்கு தொடர்பான விவரங்கள் கிடைக்கும். செயல்முறை முடிந்த உடன் கணக்குதாரரின் கணக்கு உடனடியாக செயல்படுத்தப்படும். உடனடியாக கணக்கு வைத்திருப்பவர் பரிவர்த்தனைகளை இணையதள வங்கி சேவை மூலமாகவும், iMobile application மூலமாகவும் மேற்கொள்ளலாம்.
இந்த வங்கி கணக்கை திறக்க கணக்குதாரருக்கு ஆதார் மற்றும் நிரந்தர கணக்கு எண் (PAN) கட்டாயம் தேவை. மேலும் அவருடைய ஆதார் எண் கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இணைக்காவிட்டால் Insta Save Account திறப்பதை செயல்படுத்த முடியாது.
Insta Save FD கணக்கை புதிய வங்கி வாடிக்கையாளர்களால் மட்டும் தான் திறக்க முடியும். ஐசிஐசிஐ வங்கியில் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரால் Insta Save FD கணக்கை தேர்வு செய்ய முடியாது. எனினும் அவர் Insta Save account ஐ திறக்கலாம்.
அரசு அறிவிப்பு: வருமான வரி ரீபண்ட் பணத்தை துரிதமாக பெறுவது எப்படி?
Insta Save Account ஐ எவ்வாறு திறப்பது
ஐசிஐசிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு செல்லவும்.
வங்கி கணக்கு வைத்திருப்பவரின் கைபேசி எண்ணுக்கு அனுப்பபடும் OTP அடிப்படையில் கணக்கு திறக்கப்படும்.
PAN எண் NSDL மூலமாக சரிப்பார்க்கப்படும். கைபேசி எண் OTP மூலம் சரிப்பார்க்கப்படும்.
இவை இரண்டும் சரிப்பார்க்கப்பட்டவுடன், கணக்குதாரர் கணக்கு தொடர்பான விவரங்களை நிரப்ப வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.