ICICI Minimum Balance Rules: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர் தங்களது வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகையை மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டுமென்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மெட்ரோ சிட்டி மற்றும் நகரங்களில் வசிக்கும் ‘சேவிங்ஸ் பேங்க்’ வாடிக்கையாளர்கள் 10000 ரூபாயை தங்களது சராசரி பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும். சிறு நகரங்களில் வசிப்போர் ரூ.5000-ஐ அவர்களது கணக்கில் சேமிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும். தவிர கிராமத்தில் வசிப்போர் ரூ.2000 மற்றும் பின் தங்கிய கிராமங்களில் வசிப்போர் ரூ.1000 என அவர்களது கணக்கில் மினிமம் தொகை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு icicibank.com என்ற முகவரியை அணுகவும்.