ரூ. 100 க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்.. கேஷ்பேக் சலுகை வழங்கும் ஐடியா!

அதிக விலையுள்ள ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும்.

ஐடியா   நிறுவனம்  வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ரூ. 100 ரீசார்ஜ் திட்டத்தில் கூட கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் டெலிகாம் மார்க்கெட்டில் ஏற்ப்ட்ட  மாற்றங்கள் ஏராளம். குறிப்பாக ஜியோவின் வருகைக்கு பின்பு ஏகப்பட்ட மாற்றங்கள். ஜியோ வழங்கிய கேஷ்பேக் சேவை  மற்றும்   புதிய புதிய ரீசாட்ர்ஜ் திட்டங்கள் அனைத்து மக்களை வெகுவாக கவர்ந்தன. இதன் காரணமாக யூசர்கள் பலரும் ஜியோவின் பக்கம் சாய்ந்தன.

டெலிகாம் மார்கெட்டில்  இருக்கும் பல முன்னணி நிறுவன்ங்களும் தோல்வியை தழுவின. இருந்த போதும் ஏர்டெல் நிறுவனம்  கடுமையான போட்டியை தந்து வருகிறது. இந்த போட்டி களத்தில் தற்போது ஐடியா நிறுவனமும் இணைந்துள்ளது. ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.100 ரீசார்ஜ் செய்யும் ரூ.20 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கூப்பன் வடிவில் வழங்கப்படும் இந்த தொகையை கொண்டு ரூ.199 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த சலுகையை பெற அனைத்து ரீசார்ஜ்களும் மை ஐடியா செயலி அல்லது ஐடியா வலைத்தளத்தை பயன்படுத்த வேண்டும்.

இதனைத்தொடர்ந்து, ஐடியா நிறுவனம் அன்லிமிட்டெட் ரீசார்ஜ் செய்யும்  பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும்   கேஷ்பேக், கார்கள், பைக்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வென்றிட புதிய பரித்தொகை திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.

ஐடியாவின் அறிவிப்பின் படி, ஜூன் 5 முதல் ஆகஸ்டு 15-ம் தேதி வரை ஐடியா செயலி அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ.20 கேஷ்பேக் கூப்பன் வழங்கப்படுகிறது.

×Close
×Close