Advertisment

Income Tax Return Filing 2019: வருமானவரி தாக்கல் செய்ய போறீங்களா : இந்த முக்கியமான விஷயங்களை மறந்துறாதீங்க!!!

Things To Know Before Filing ITR This Year….: 2018 -19ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கைதாக்கல் செய்ய, ஜூலை 31ம் தேதி தான் இறுதிநாள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how to file income tax returns, tax filing tips

Income Tax, Income Tax Returns, itr filing 2019, income tax returns 2019, how to file income tax returns, I-T returns filing, income tax filing guidelines, income tax news, tax filing tips, tax filing guidelines, income tax filing 2019, tax filing 2019, last date for filing income tax returns, வருமானவரி கணக்கு தாக்கல் வரிச்சலுகை

Income tax return (ITR) filing Tips : 2018 -19ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கைதாக்கல் செய்ய, ஜூலை 31ம் தேதி தான் இறுதிநாள். இதற்கான காலக்கெடுவை, வருமான வரித்துறை இனி நீட்டிக்காது என்பதால், அபராதம் இல்லாமல் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisment

இந்த நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்)யை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 5ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். அதில் தனிநபர் வருமானவரி வரம்பு உயர்த்தப்படவில்லை. கோடீஸ்வரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டிற்கு ரூ.2 கோடி முதல் 5 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 3 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதாகவும், ஆண்டிற்கு ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 -19ம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய, இந்த மாதம் 31ம் தேதி கடைசி நாள். வருமான வரி தாக்கல் செய்ய உள்ளோர், எந்தெந்த வரிகளை செலுத்தப்போகிறோம், எதற்கெல்லாம் சலுகை உள்ளது. கட்டப்பட வேண்டிய வரிவிகிதம் எவ்வளவு, அதில் வரிச்லுகைககள் போக,எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதற்கான ஆவணங்களை கையில் வைத்துக்கொண்டு வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆயத்தமாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்படாது என்பதால், வருமான வரி தாக்கல் செய்ய இருப்பவர்கள், விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய உள்ளோர் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்

முக்கிய ஆவணங்கள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன், அதற்கு தேவையான அனைத்து முக்கிய ஆவணங்களையும் பயன்படுத்துவதற்கு வசதியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். வருமான வரி செலுத்துபவர் மாத சம்பளம் பெறுபவர் என்றால், படிவம் 16யை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ காப்பீடு ரசீது, மியூச்சுவல் பண்ட்ஸ், பங்கு பரிவர்த்தனைகள் வங்கி சேமிப்பு திட்டங்கள், சிறுசேமிப்பு திட்டங்கள் உள்ளிட்ட வரிச்சலுகை கோருவதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். அதேபோல், வங்கிகள் வழங்கும் வட்டிக்கான சான்றிதழ், கடன்களுக்கான வட்டி சான்றிதழ், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீதுகள், பங்குவர்த்தகம், பங்குகளை விற்பனை செய்ததற்கான சான்று, ரியல் எஸ்டேட் யூனிட்கள், சாலரி சிலிப் போன்ற முக்கிய ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

வரிச்சலுகைகளை கிளைம் செய்யுங்கள்

வரிச்சலுகைகளை கிளைம் செய்வதன் மூலம், நாம் செலுத்தும் வருமான வரியின் அளவை குறைக்கலாம். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன், நாம் கட்ட உள்ள வரிகள் அனைத்தும் 80சி. 80டி, 80 டிடில 80 இஇ, 80சிசிடி 80டிடிஏ மற்றும் 80இ பிரிவுகளின் கீழ் வரிச்சலுகைக்கு தகுதி உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

அபராதங்களை தவிர்ப்போம்

வருமான வரி கணக்கை சரியான நேரத்தில் செலுத்திவிட்டால், கடந்த காலங்களில் நிலுவையில் உள்ள அபராதங்களை, சிலநேரங்களில் வருமானவரித்துறை ரத்து செய்கிறது. எனவே, உரிய நேரத்ததில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து அபராதம் உள்ளிட்ட தேவையில்லாத பண இழப்புகளை தவிர்ப்போம்.

Income Tax Return Filing
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment