Advertisment

ITR Filing: உடனே பண்ணுங்க; கடைசி நாள் அவகாசம் வரை ஏன் காத்திருக்கக் கூடாது தெரியுமா?

Income Tax Return: Why you shouldn’t wait for the extended due date to file ITR: தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்; உடனே வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுங்கள்

author-image
WebDesk
New Update
ITR Filing: உடனே பண்ணுங்க; கடைசி நாள் அவகாசம் வரை ஏன் காத்திருக்கக் கூடாது தெரியுமா?

கொரோனா காரணமாக கடந்த மதிப்பீட்டு ஆண்டை (AY 2020-21) போலவே, இந்த மதிப்பீட்டு ஆண்டிலும் (AY 2021-22) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பர் 30, 2021 வரையிலும், தற்போது டிசம்பர் 31, 2021 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி இணையதளத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தற்போது நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

"கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், வரி செலுத்துவோருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி இணையதளத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, ரிட்டர்ன்களை தாக்கல் செய்வது மற்றும் சரிபார்ப்பது தொடர்பாக, 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.” என்று ஹோஸ்ட்புக்ஸ் லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைவர் கபில் ராணா கூறினார்.

"இருப்பினும், வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்வதில் கால அவகாசம் பெற்றிருந்தாலும், பிரிவு 234 A மற்றும் 234 B ஆகியவற்றின் கீழ் வட்டியைத் தவிர்ப்பதற்காக வரி செலுத்துவோர் சீக்கிரம் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும், ஏனெனில் வருமான வரிச் சட்டம் 1961 ன் பிரிவுகள் 234 A மற்றும் 234 B –ன் படி தாமதமாக ரிட்டர்ன்களை தாக்கல் செய்வதற்கான அபராதத்தில் எந்த சலுகையும் இல்லை. ஐடிஆர் தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் தாமதமாக வரி செலுத்துவதற்கு வருமான வரி செலுத்துவோர் பிரிவு 234 A ன் கீழ் வட்டி செலுத்த வேண்டும். வரி செலுத்துவோர் முன்கூட்டியே வரி செலுத்தவில்லை அல்லது வரி பொறுப்பில் 90 சதவிகிதத்திற்கும் குறைவாக செலுத்தியிருந்தால், அவர் பிரிவு 234B இன் கீழ் மாதத்திற்கு 1 சதவிகிதம் அல்லது மாதத்திற்கு ஒரு பகுதியாக ஏப்ரல் முதல் வரி செலுத்தும் தேதி வரை வட்டி செலுத்த வேண்டும்” என்று ராணா கூறினார்.

செலுத்த வேண்டிய வரி மீதான வட்டி

செலுத்த வேண்டிய வரி மீதான வட்டி குறித்து பேசிய ராணா, “பிரிவு 208 ன் கீழ், ஒரு நபர் ஆண்டுக்கு 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட வரிப் பொறுப்பு இருந்தால் முன்கூட்டியே வரி செலுத்த வேண்டும். எனவே, நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய தாமதமானாலும், முன்கூட்டியே வரி செலுத்துவது நல்லது. முன்கூட்டியே வரி செலுத்துவதைப் பொறுத்தவரையில், இந்தியாவில் வசிக்கும் ஒரு நபர் 60 வயது அல்லது அதற்கு மேல் மற்றும் வணிகம் மற்றும் தொழிலில் இருந்து வரும் வருமானம் தவிர வேறு வருமானம் இருந்தால் முன்கூட்டியே வரி செலுத்த தேவையில்லை, எனவே அத்தகைய நபர்களுக்கு பிரிவு 234B இன் கீழ் வட்டி பாதிப்பு இருக்காது. "

"முன்கூட்டியே வரி, 89/90, 90A & 91 மற்றும் TDS/TCS கழித்தபின் மொத்த வருமானத்தின் மீதான வரியின் அளவு, குறைந்தபட்ச வரி வரவு 1 லட்சத்தை தாண்டியது என்றால் பிரிவு 234A இன் கீழ் வட்டி பொருந்தும். இங்கு கவனிக்க வேண்டியது வரி செலுத்துவதைப் பொறுத்தவரை, வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதுவும் இல்லை மற்றும் இணையதளம் தடையின்றி வேலை செய்கிறது, ”என்று ராணா கூறினார்.

தாமதக் கட்டணம்

செலுத்த வேண்டிய வரியின் வட்டி தவிர, காலக்கெடுவை இழப்பது தாமதக் கட்டணத்தையும், வருமான வரிச் சட்டத்தின் 234F யையும் ஈர்க்கிறது.

"தாமதமான கட்டணமாக ரூ. 5,000 செலுத்தப்பட வேண்டும். மொத்த வருமானம் ரூ .5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், கட்டணம் ரூ .1,000 ஆக இருக்கும்,” என்றார் ராணா.

எவ்வாறாயினும், ஒரு மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31 வரை ஒரு குறிப்பிட்ட தேதியைத் தவறவிட்டால் ரூ .5,000 தாமதக் கட்டணம் பொருந்தும், மற்ற சந்தர்ப்பங்களில் கட்டணம் ரூ .10,000 ஆகிறது.

எனவே, டிசம்பர் 31, 2021 நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவை தவறவிட்டால், வரி செலுத்துவோர் இரட்டை அபராதம் அல்லது ரூ .10,000 செலுத்த வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Income Tax Itr Filling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment