Advertisment

இந்தியன் வங்கி முக்கிய ‘கொரோனா’ அப்டேட்: தவணை, வட்டி கவலையை விடுங்க!

Indian Bank moratorium extension: இந்தியன் வங்கி இ.எம்.ஐ, தவணை, வட்டி ஆகியன வசூல் செய்வது ஆகஸ்ட் 31 வரை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indian bank, public sector banks, axis bank, state bank of india, personal loan, home loan, இந்தியன் வங்கி, பொதுத்துறை வங்கிகள் ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பெர்சனல் லோன், வீட்டுக்கடன்

Indian Bank Tamil News, Indian Bank Tamil Nadu News, Indian Bank News In Tamil, Indian Bank moratorium extension, இந்தியன் வங்கி, இந்தியன் வங்கி கடன்

Indian Bank News In Tamil: இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய கொரோனா அப்டேட்டை வழங்கியிருக்கிறது. கோவிட் 19 பேக்கேஜ் அடிப்படையில் இ.எம்.ஐ, தவணை, வட்டி ஆகியன வசூல் செய்வது ஆகஸ்ட் 31 வரை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு இது மூச்சு விடுவதற்கான ஒரு அவகாசம்.

Advertisment

கொரோனா நெருக்கடியால் நாடு முழுவதும் மக்கள் சிரம்பட்டு வருகிறார்கள். பல்வேறு தரப்பினருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைச் சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கோவிட் 19 நிவாரண பேக்கேஜை அறிவித்தார். ரிசர்வ் வங்கியும் அதைத் தொடர்ந்து வங்கிகளில் கடன்களுக்கான வட்டி வசூல், தவணை வசூல் ஆகியவற்றை 3 மாதங்கள் தள்ளி வைக்க அறிவுறுத்தியது.

அதை ஏற்று இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த நிவாரணத்தை அறிவித்திருக்கிறது. அதன்படி இ.எம்.ஐ, தவணை, வட்டி ஆகியவற்றை ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்ட காலமாக ஜூன் 1-ல் இருந்து ஆகஸ்ட் 31, 2020 வரை தள்ளி வைத்திருக்கிறது இந்தியன் வங்கி. அதாவது, மேலும் 3 மாதங்கள் இ.எம்.ஐ, தவணை, வட்டி ஆகியவற்றை செலுத்தும் நெருக்கடியை வங்கிகள் அளிக்காது.

செப்டம்பர் 1-ம் தேதி உங்களது தவணை, வட்டி ஆகியவற்றை செலுத்தலாம். இந்தத் தகவலை இந்தியன் வங்கி எஸ்.எம்.எஸ் மூலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்திருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Indian Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment