நீங்கள் வரி விலக்கின் பலனைப் பெற விரும்பினால், பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) முதலீடு செய்யலாம்.
இந்தியா போஸ்ட் சமீபத்தில், 'வரி விலக்கின் பலனைப் பெற இந்திய தபால் மூலம் பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) முதலீடு செய்யுங்கள்' ட்வீட் செய்தது.
1) யாரெல்லாம் திட்டத்தில் இணையலாம்
நாடு முழுவதும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் ஒரு நபர் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். மைனர் அல்லது மனநிலை குன்றியர்கள் பாதுகாவலர் உதவியுடன் கணக்கு தொடங்கலாம்.
2) டெபாசிட்
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 500 மற்றும் ஒரு நிதியாண்டில் அதிகபட்ச வைப்புத் தொகை ரூ. 1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அதேபோல், ஒரு நிதியாண்டில் ரூ. 50 மற்றும் அதிகபட்சம் ரூ. 1.50 லட்சம் வரை பல தவணைகளில் தொகையை டெபாசிட் செய்யலாம்.
3) கணக்கு துண்டிப்பு
எந்தவொரு நிதியாண்டிலும், குறைந்தபட்சம் 500 ரூபாய் டெபாசிட் செய்யவில்லை என்றால், அந்த பிபிஎஃப் கணக்கு நிறுத்தப்படும். நிறுத்தப்பட்ட கணக்குகளில் கடன்/திரும்பப் பெறும் வசதி இல்லை.
எனினும், நிறுத்தப்பட்ட கணக்கை டெபாசிட் செய்பவரால் கணக்கின் முதிர்ச்சிக்கு முன் டெபாசிட் குறைந்தபட்ச சந்தா (அதாவது ரூ. 500) + ஒவ்வொரு தவறிய ஆண்டிற்கும் ரூ.50 கட்டணம் மூலம் புதுப்பிக்க முடியும்.
4) வட்டி
காலாண்டு அடிப்படையில் நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட வட்டி பொருந்தும். வருமான வரிச் சட்டத்தின் கீழ் சம்பாதித்த வட்டிக்கு வரி இலவசம்.
5) முதிர்வு
கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் முதிர்வு பெறும். எனினும் நீட்டிப்பு வசதியும் உண்டு. பிபிஎஃப் கணக்கை முன்கூட்டியே மூடும் பட்சத்தில் ஒரு சதவீத வட்டி கழிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil