Advertisment

Post Office: தினமும் ரூ417 முதலீட்டில் ரூ40 லட்சம் வருமானம்.. இரட்டிப்பு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

PPF திட்டத்தில் 417 ரூபாய் தினமும் சேமித்து முதலீடு செய்தால் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
அஞ்சல் துறை வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு மிக அவசியமான ஒன்றாக உள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் சேமிப்பு திட்டங்கள் இருப்பதால், அவற்றில் பாதுகாப்பானதை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். தபால் அலுவலக திட்டங்கள் ரிஸ்க் இல்லாதவையாகவும், நல்ல வருமானம் தருபவையாகவும் உள்ளன. அதில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம், சிறு முதலீட்டில் உங்களை லட்சாதிபதியாக்குகிறது.

Advertisment

PPF திட்டத்தில் 417 ரூபாய் தினமும் சேமித்து முதலீடு செய்தால் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும். தினமும் 417 ரூபாய் என்றால் மாதம் 12500 ரூபாய் முதலீடு. ஆக ஒரு ஆண்டுக்கு மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

அதன்படி, 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் ரூபாய் என்றால் மொத்தம் 22.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம். இந்த திட்டத்துக்கு 7.1% வட்டி கிடைக்கிறது. எனவே, உங்களது மெச்சூரிட்டி காலம் வைத்து கணக்கிடுகையில், வட்டி மட்டுமே 18.18 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. அதன்படி, மெச்சூரிட்டியின்போது மொத்தமாக உங்கள் கையில் கிடைக்கும் தொகை 40.68 லட்சம் ரூபாய் ஆகும்.

அதே சமயம், இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் சரியாத திட்டமிட்டால் கோடீஸ்வரர் ஆகலாம். முதிர்ச்சி காலத்துடன் கூடுதலாக 5 ஆண்டுகள் ஒன்றரை லட்சம் ஆண்டுதோறும் முதலீடு செய்தால், முதலீடு செய்த மொத்த தொகை 37.50 லட்சமாக இருக்கும். 7.1 % வட்டி தொகையுடன் கணக்கிட்டால், உங்கள் கைக்கு 65.68 லட்சம் ரூபாய் கிடைத்திடும். அந்த வகையில், கூடுதலாக 5 ஆண்டுகள் என மொத்த 25 ஆண்டு முதலீடு செய்தால், உங்கள் கைக்கு 1.03 கோடி ரூபாய் கிடைக்கிறது.

பிபிஎஃப் கணக்கு யார் தொடங்கலாம்

சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் பிபிஎஃப் கணக்கை தொடங்கலாம். இந்தத் திட்டம் ஒவ்வொரு நபருக்கும் ஒரு கணக்கை வழங்குகிறது.ஜாயின்ட் அக்கவுண்ட் வசதி கிடையாது.

தேவையான ஆவணங்கள்

  • அடையாள சான்று
  • முகவரி சான்று
  • பான் கார்டு
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • பதிவு படிவம் E

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Post Office Scheme Post Office Ppf Post Office Savings Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment