Advertisment

ஷாக் கொடுத்த முக்கிய வங்கி: உங்க பணத்திற்கு வட்டி கம்மி; இந்த சேவைக்கு கட்டணம் அதிகம்!

இந்திய தபால் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
rural postal life insurance, gram suraksha scheme

இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி வட்டி மற்றும் சில சேவைகளுக்கான கட்டணங்களை திருத்தியுள்ளது. IPPB டோர் ஸ்டெப் சேவை கட்டணங்களையும், சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி வீதத்தையும் திருத்தியுள்ளது.

Advertisment

தற்போதைய நிலையில், டோர்ஸ்டெப் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் ஆகஸ்ட் மாதம் முதல் இச்சேவைகளுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, 1 லட்சம் ரூபாய் வரை பணம் இருக்கும் கணக்குகளுக்கு 2.75% வட்டி கிடைக்கிறது. இந்த வட்டி 2.5% ஆக குறைக்கப்படுகிறது. 2 லட்சம் ரூபாய் வரை பணம் இருக்கும் கணக்குகளுக்கான வட்டியில் (2.75%) எந்த மாற்றமும் இல்லை.

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேமிப்புக் கணக்கின் ஒரு தனித்துவமான அம்சம் அதன் ‘பேங்கிங் வித் க்யூஆர் கார்டு’. QR அட்டையின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், கணக்கு வைத்திருப்பவரின் பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி அங்கீகாரத்தை செய்ய முடியும் என்பதால் ஒருவர் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள கணக்கு எண் அல்லது எந்த பாஸ்வோர்டு நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை. ஐபிபிபி கணக்கு மூலம் NEFT, IMPS, RTGS ஆகியவற்றின் நிதி பரிமாற்ற முறைகளையும் ஒருவர் பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Post Payments Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment