Advertisment

irctc.co.in - ல் டிக்கெட் புக் செய்தால் நெட்பேங்கிங், வாலெட், டெபிட், கிரெடிட் கார்ட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ரயில் டிக்கெட் புக் செய்யும் போது எஸ்பிஐ வங்கி எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Get Regular income by becoming an authorised IRCTC ticket booking agents

Get Regular income by becoming an authorised IRCTC ticket booking agents

irctc.co.in : ரயில் பயண டிக்கெட்களை irctc.co.in இணையதளம் மூலமாக எங்கு இருந்து வேண்டுமானாலும் இணையதளம் வழியாகப் புக் செய்யலாம்.

Advertisment

இப்படி ரயில் டிக்கெட் புக் செய்யும் போது இணையதள வங்கி சேவை, வாலெட், கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்கள் கேட்வே கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.

உதாரணத்திற்குப் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா கார்டுகள் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது கூடுதலாக 10 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது.

எனவே ஐஆர்சிடிசி தளத்தில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது எஸ்பிஐ வங்கி எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது என்பதை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

நெட் பேங்கிங்:

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி டிக்கெட் புக் செய்தால் அத்ற்கு ரூ. 10 கட்டணம்.

வாலெட்:

எஸ்பிஐ படி(buddy) மூலம் பணம் செலுத்தினால் ரூ. 10 கட்டணம்.

டெபிட் கார்டு:

ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ. 15 கட்டணம்.

கிரெடிட் கார்டு:

கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால் ரூ. 20 கட்டணம் வசூலிக்கபடுகிறது.

இந்த கட்டணங்கள் அனைத்தும் ஒவ்வொரு வங்கிக்கு ஏற்ப மாறுபடும். வரும் நாட்களில் அதுக் குறித்தும் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment